போகன் பட டைரக்டர் ஒரு வேஸ்ட்! கழுவித் தள்ளிய அரவிந்த்சாமி!
‘சுத்தியல் சும்மா கிடந்தாலும் ஆணி கொண்டைய சிலுப்பிகிட்டு ‘அடி அடி’ங்குமாம்…’ அப்படியாகிவிட்டது ‘போகன்’ பட இயக்குனர் லட்சுமணன் நிலைமை. பட விளம்பரங்களில் அரவிந்த்சாமியை ஓரங்கட்டினாலும் கட்டினார். நாக்கை சுத்தியலாக்கிக் கொண்டு அடி அடியென்று அடிக்க ஆரம்பித்துவிட்டார் அரவிந்த்சாமி.
சில தினங்களுக்கு முன் ஒரு ஆங்கில பத்திரிகைகக்கு பேட்டியளித்தவர், “இந்தப்படத்தின் டைரக்டர் லட்சுமணுக்கு ஒண்ணுமே தெரியல. நான்தான் ஸ்கிரீன் பிளேவில் நிறைய திருத்தினேன். அதுமட்டுமல்ல… இன்டர்வெல் பிளாக் கூட அவருக்கு சரியா வைக்கத் தெரியல…” என்று ஓப்பனாக போட்டு உடைக்க, வெற்றிப்பட இயக்குனராச்சே என்று வியந்து வியந்து பார்த்தவர்கள் துக்கடா ரேஞ்சுக்கு அவரை நோக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதுவுமில்லாமல், அவருக்கு பெரிய சம்பளம் பேசி அட்வான்ஸ் கொடுக்க நினைத்த சில பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் கையை சுருக்கிக் கொண்டார்களாம்.
‘போகன்’ பெரிய வெற்றி என்று திசையெங்கும் கொண்டாடப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், லக்சுமணுக்கு கிடைத்திருக்கும் இந்த பாராட்டு(?) கோணக் கிழங்கை சாணை பிடிச்ச மாதிரி ‘ஞொய்’ என்று ஆகிவிட்டதே… அதுதான் செம காமெடி!