கிராண்டியர் சீமராஜா! வயிறெரியும் அருண் விஜய்!

0

வயிற்று வலிக்காரன் ஆசிட்டை குடிச்ச மாதிரி ஆகிருச்சே அருண் விஜய்யின் நிலைமை? அவரவரின் இடம் அவரவருக்கு. அது தெரியாமல் குத்தலுக்கும் குடைச்சலுக்கும் புத்தூர் தைலம் தேய்த்துக் கொண்டு புரளும் அநேக ஹீரோக்கள் வரிசையில் அருண் விஜய் முதலிடத்தை பிடித்துவிட்டாரோ? இப்படியொரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது அவரது ட்விட் ஒன்று.

நேற்று ‘சீமராஜா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையிலிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடை பழகும் குழந்தை தேர் சக்கரத்தை பிடித்துக் கொண்டு நடந்தால் எப்படியிருக்கும்? அப்படிதான் கொஞ்ச நாட்களாக எல்லாவற்றிலும் கிராண்டியர் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். முக்கியமாக அவரை வைத்து படம் தயாரிக்கும் ஆர்.டி.ராஜா. நேற்றும் அப்படிதான். இடது புறத்திலிருந்து கண்ணை திருப்பி வலது புறம் வருவதற்கே பத்து நிமிஷம் ஆகும் போல இருந்தது. நடுவில் அவ்வளவு பெரிய டிஜிட்டல் ஸ்கிரீன்.

அதில் சீமராஜா படத்தின் ட்ரெய்லர் ஓட… கண் விழி இமைக்காமல் ரசித்தது பிரஸ். அதற்கப்புறம் மைக்கை பிடித்த சிவகார்த்திகேயன், இந்தப்படத்தில் ஒரு ராஜா கேரக்டரில் நடித்ததை பற்றி பேசினார். “எனக்கும் பாகுபலி மாதிரியான படத்தில் நடிக்கணும்னு ஆசை இருந்தது. அந்த ஆசையை இந்த சின்ன கேரக்டர் நிறைவேற்றியிருக்கு” என்று சந்தோஷப்பட்டார்.

லட்சக்கணக்கான ரசிகர்களையும், தொடர் ஹிட்டுகளையும் அடைந்து வரும் சிவகார்த்திகேயன், அந்த நிகழ்வில் பேசியது மனம் கொள்ளா மகிழ்வின் வெளிப்பாடு. அதற்கு முழு உரிமையும் இருக்கிறது அவருக்கு. தயாரிப்பாளரை பிச்சை எடுக்க விட்டதில்லை அவரது படங்கள். அப்படியிருக்க… தன் திறமையை தன் வெற்றியை கொண்டாட ஒரு ஹீரோவுக்கு உரிமையில்லையா?

சரி… அருண் விஜய்யின் ட்விட் என்ன? யாரெல்லாம் மாஸ் பண்ணுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். சர்போர்ட் ட்ரூ டேலன்ட் என்று கூறியிருக்கிறார் அந்த ட்விட்டில். அதற்கப்புறம் அவரது ட்விட்டர் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்ல… சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவரது ட்விட்டுக்கு சுட சுட பதிலும் கொடுத்து வருகிறார்கள்.

அதற்கப்புறம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது அவரது பக்கம். அதற்கப்புறமும் சும்மாயில்லை அவர். டேய்… அதை நான்தான் போட்டேன். என்ன இப்ப என்று மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார்.

இன்னும் எத்தனை பாட்டில் ஆசிட்டை குடிப்பீங்க அருண்?

Leave A Reply

Your email address will not be published.