ஜல்லிக்கட்டு களத்தில் ஆர்யா! விரட்டியடித்த பொதுமக்கள்!

0

வாயே நோய். வாக்குவாதமே வயித்துப்போக்கு என்றாகி விட்டது ஆர்யாவின் அட் பிரசன்ட் டைம்! ஜல்லிக்கட்டுன்னா என்ன? என்று கேட்டாலும் கேட்டார். கிழித்து தொங்க விடுகிறார்கள் தமிழர்கள். “சும்மா விளையாட்டுக்கு பேசுன பேச்சை சீரியஸ்சா எடுத்துகிட்டீங்க. நான் சந்தனத் தேவன் படத்தில் ஜல்லிக்கட்டு வீரனா நடிக்கிறேன். இந்தக்கதையை அவர் எங்கிட்ட சொல்லியே ஒரு வருஷம் ஆகிருச்சு. அப்புறம் எப்படி எனக்கு ஜல்லிக்கட்டுன்னா தெரியாம போகும்?” என்றெல்லாம் அவர் விளக்கமளித்தாலும், மக்கள் விளங்கிக் கொண்டால்தானே? போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள் இப்போதும்.

இந்த நிலையில்தான் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுக்க கிளம்பினார் இயக்குனர் அமீர். போகிறவர் சும்மாயில்லாமல் தன்னுடன் ஆர்யாவையும் அழைத்துக் கொண்டு போய்விட்டார். போராட்டக் களத்தில் போய் இறங்கியதுதான் தாமதம். பிரித்து மேய்ந்துவிட்டார்கள் இளைஞர்கள். “இவன் எதுக்கு இங்க வந்தான்? கிளம்ப சொல்லுங்க அவனை” என்று காச்மூச்சென கூச்சலிட, வெலவெலத்துப் போய்விட்டார் ஆர்யா.

காரைவிட்டு ஆர்யாவை கீழே இறங்கவே விடவில்லை பொதுமக்கள். வேறு வழியில்லாமல் அப்படியே அவரை திருப்பி அனுப்பினார் அமீர். இதே மதுரை மண்ணில்தான் அவர் ‘சந்தனத் தேவன்’ படத்தை எடுத்தாக வேண்டும். மிச்ச சொச்ச நாட்கள் எப்படி நிம்மதியாக கழியப் போகிறதோ?

Leave A Reply

Your email address will not be published.