ஒண்ணே ஒண்ணு செய்யலாம்! தயாரிப்பாளர் சங்கத்தை கலக்கிய ஆர்யா!

0

விடிஞ்சா எங்க போறது என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் அநேக நடிகர்கள். வசதியாக இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு பேக்கப் ஆகிக் கொண்டிருக்க… நடுத்தர நடிகர்களுக்குதான் நாக்கு தள்ளுகிறது. எல்லாம் இந்த சினிமா ஸ்டிரைக்கின் கைங்கர்யம்.

இந்த நிலையில்தான் வெளிநாட்டுக்கும் போக முடியாமல், உள் நாட்டிலும் பொழுது போகாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக இவர் நடத்தி வந்த கல்யாண வேட்டைக்கும் கத்தி போட்டுவிட்டார்கள். யெஸ்… இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்துக்கே போய்விட்டார் ஒருவர். அதன் காரணமாக சின்னத்திரை ஷுட்டிங்கும் இல்லை. இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரு யோசனை சொன்னாராம் ஆர்யா.

‘யாரும் படப்பிடிப்பு இல்லாம சும்மாதானே இருக்கோம். நடிகர் நடிகைகளை வச்சு சென்னையிலேயே ஒரு ஸ்டார் நைட் நடத்தினா, செலவெல்லாம் போக ஐந்தாறு கோடி கிடைக்குமே? அதை தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சி நிதியாக பயன்படுத்தலாமே’ என்று சொல்ல…. ஆர்யாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள் சங்கத்தினர்.

பொழுது போக்குனா மாதிரியும் ஆச்சு. பழுது நீக்குன மாதிரியும் ஆச்சு. சூப்பரோ சூப்பர் ஆர்யா!

Leave A Reply

Your email address will not be published.