இந்த உலகமகா நடிகருக்கு உச்சத்துல சனி?

0

ஓட்டை, உடைசல், பழைய பிளாஸ்டிக்குக்கு சினிமா படம்…. என்று தெருத் தெருவாக விற்றால் கூட போணியாகாத நடிகர்தான் அசோக் செல்வன். (பெயரை சொன்னவுடன் அடையாளம் தெரியாது என்பதற்காக வாசகர்களின் சிரமம் உணர்ந்து பக்கத்தில் அவரது படத்தை வெளியிட்டுள்ளோம்)

பீட்சா2, தெகிடி, 144, ஆரஞ்சு மிட்டாய் என்று இவர் நடித்த எந்தப்படமும் தயாரிப்பாளரையும் சரி. வாங்கிய விநியோகஸ்தரையும் சரி. கொள்ளை கொள்ளையாய் கவலை கொள்ள வைத்ததே ஒழிய… பத்து பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இல்லை. அப்படியிருந்தும் இவருக்கு ஒன்றிரண்டு வாய்ப்புகள் வருவதற்கு காரணம்… அந்த மைக்ராஸ்கோப் லென்சுகளுக்கே கூட தெரியாத ரகசியம். (வேற ஏதாவது டெக்னிக்கா இருக்கும்)

அப்படியொரு இக்கட்டில் நின்று இடர்பாட்டை மெல்லும் இந்த இத்துப்போன நடிகருக்கே பிரஸ் என்றால் பிஸ்கோத்து ஆகிவிட்டதுதான் வேடிக்கை! சமீபத்தில் இவர் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில்தான் மொத்த சினிமா பிரஸ்சும் அப்செட்!

தினமலர் நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்ததும், அதற்கு சுமார் பத்து வருஷங்களுக்கு முன் நடிகர்களில் சிலர் ரீயாக்ஷன் காட்டியதும் பலருக்கு நினைவிருக்காது. அந்த நாளிதழையும், அந்த செய்திக்கு துளியும் சம்பந்தமில்லாத நிருபர்களையும் பொத்தாம் பொதுவாக திட்டித் தீர்த்த சூர்யா, விவேக் உள்ளிட்ட நடிகர்கள் மீது சுரணையுள்ள ஒரு நிருபர் போட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து சம்பந்தப்பட்ட எட்டு பேர் மீதும் பிடிவாரண்ட் போட்டது ஊட்டி நீதிமன்றம். இதில் ‘வீ சப்போர்ட் சூர்யா’ என்ற ஹேஷ்டாக்குடன் அவருக்கு சப்போர்ட் செய்தார்கள் அவரது ரசிகர்கள். இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அப்படி பேசிய நடிகர்களே மன்னிப்பு கேட்டதும், அதை சற்றே உப்பு குறைவாக உண்ணும் சினிமா பத்திரிகையாளர்கள் ஏற்றுக் கொண்டு நட்பு பாராட்டி வருவதும் நாடறிந்த கதை.

நடுவில் எதற்கு இந்த அசோக் செல்வன் மூணு சக்கர சைக்கிளை ஓட்டிக் கொண்டு ரேஸ் மைதானத்திற்குள் நுழைந்தார் என்பதுதான் டவுட். என்ன சொல்லியிருக்கிறார் இந்த சின்னத் தம்பி?

“கண்டனம் தெரிவிக்க வந்த இடத்தில் வாழ்த்து மொழியா பாட முடியும்?” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். இதையறிந்த சினிமா பத்திரிகையாளர்கள் “சும்மா கிடந்த சங்கை இவரு எதுக்கு மறுபடியும் எடுத்து ஊதுறார்?” என்று அதிர்ச்சியாகியிருக்கிறார்கள். அதைவிட பெரிய அதிர்ச்சி, இந்த உப்புக்கு சப்பாணி நடித்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம், இந்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

பழசையெல்லாம் மறந்துவிட்டு எல்லாரும் அசோக் செல்வனை நல்லபடியா எழுதி நல்லா வாழ வச்சுருங்க! அது ரொம்ப முக்கியம்!

Leave A Reply

Your email address will not be published.