சிம்புவை இயக்கணும்! ஐஸ்வர்யா தனுஷ் முடிவுக்கு யார் முட்டுக்கட்டை?

0

மார்க்கெட்டில் எப்போதும் மார்கண்டேயனாகவே இருக்க ஒரு கொடுப்பினை வேண்டும். வயசு ஏறிக் கொண்டே போனாலும், எப்போதும் பதினாறாகவே இருக்கிறார் சிம்பு. தோற்றத்திலல்ல. வியாபாரத்தில்! இத்தனைக்கும் சிம்புவின் மீது கொலைப் பழியை தவிர மீதி அத்தனை பழியையும் போட்டுப் பார்த்து புல்லரித்துவிட்டது இன்டஸ்ட்ரி. இருந்தாலும், கெட்டியாக நிற்கும் சிம்புவுக்கு இப்போதும் கதை சொல்வதற்கும் அட்வான்ஸ் கொடுப்பதற்கும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்கிறது.

இந்த கிடுகிடு நெரிசலில் எப்போதும் எக்ஸ்பயரி ஆகாத க்ரீன் கார்டுடன் ஒரு பெண்ணும் நிற்கிறார். அவர்தான் ஐஸ்வர்யா தனுஷ் ரஜினிகாந்த். நானும் ஒரு டைரக்டர்தான் என்று எப்போது நிருபித்தாரோ, அப்போதிலிருந்தே அவர் மனசில் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதாம். நடுவில் ஒரு கதையை அவருக்கு சொல்லிவிட்டதாகவும் கூட தகவல்.

ஐஸ்வர்யா சிம்பு காம்பினேஷனில் ஒரு படம் வரப்போகிறது என்று தெரிந்தாலே அதற்கு மார்க்கெட்டிலும் சரி, சோஷியல் மீடியாவிலும் சரி. எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்பதை அறியாதவரா அவர்? இவ்வளவு முன்னேற்றம் நடந்தும், திடீர் முட்டுக்கட்டையாகி நிற்கிறதாம் அந்த முயற்சி?

யார் தடுத்தது? எதற்காக தடுக்கணும்? என்கிற கேள்விக்கெல்லாம் விடையை அவரவர் யூகத்திற்கு விட்டுவிட வேண்டியதுதான்!

முக்கிய குறிப்பு- சிம்புவின் பர்த் டேவுக்கு ரஜினியே போன் செய்து வாழ்திய கதைதான் உங்களுக்கு தெரியுமே?

Leave A Reply

Your email address will not be published.