எந்திரன் 2 ல் ஐஸ்வர்யாராய்! எப்படி வந்தார் உள்ளே?

0

குடும்பம், குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட ஐஸ்வர்யா ராய், இனி உண்மையாக நடிக்க வந்தால் கூட, ‘பொம்மையாட்டம் இருக்காரே’ என்று வியக்க தயாராக இல்லை ஒருவர் மனசும்! இந்த உண்மை நிலையை உணர்ந்த மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள், ஐஸ்சுக்கு ஓய்வு கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் எந்திரன் பார்ட் 2 வில் ஐஸ்வர்யாராய் இல்லாமல் எப்படி கதை நகரும்? அங்குதான் தன் கற்பூர புத்தியை பற்ற வைத்திருக்கிறார் ஷங்கர்.

படம் முழுக்க ஐஸ்வர்யாராய் இருப்பார். ஆனால் முகத்தை காட்டப் போவதில்லை. விஞ்ஞானி வசீகரனிடம் போனில் பேசிக் கொண்டேயிருப்பாராம். (எந்திரன் பார்ட் 1 ல் ஐஸ்சுக்காக தமிழில் டப்பிங் பேசிய அதே லேடியாகதான் இருக்கும்) சிட்டிதான் கொடூரமா மாறிட்டான். அதனால் மென்மையா ஒரு பெண் ரோபோ செய்வோம் என்று எமியை உருவாக்குவாராம் வசீகரன். ரோபோ எமியின் பெயர் நிலா.

வசீகரனிடம், “சிட்டி எப்படி என்னை காதலிக்க ஆரம்பிச்சுதோ… அதுமாதிரி நீ நிலாவை லவ் பண்ணப் போற” என்று எச்சரிப்பாராம் ஐஸ்வர்யாராய். “அதுக்காகதான் உடம்பில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இந்த நிலாவை உருவாக்கப் போறேன்” என்று சவால் விட்டு உருவாக்கும் வசீகரனுக்கு அந்த நிலாவால் வரப்போகும் வேறு பல சங்கடங்கள்தான் முழு படமும் என்கிறார்கள்.

ஐஸ்வர்யாராய் ரஜினியுடன் போனில் பேசுவது போல காட்சிகள் இருந்தாலும், ஒரு சில காட்சிகளுக்கு குளோஸ் அப்பில் அவரை பயன்படுத்தலாமா என்கிற யோசனையில் இருக்கிறாராம் ஷங்கர்.

Leave A Reply

Your email address will not be published.