முதல் மூன்று இடத்தில் சிம்பு இருக்கணும்! கனவு காணும் கவுதம் மேனன்!

ஊரையெல்லாம் ஒரண்டையிழுத்தாலும், கவுதம் மேனனை பொருத்தவரை சிம்பு, ரொம்ப ரொம்ப தங்க கம்பு! இத்தனைக்கும் சிம்புவுடன் இணைந்து அவர் செயல்பட்டது ரெண்டே படத்தில்தான். அதற்குள் சிம்பு மீது அன்பு கொண்டு திரிகிறார் அவர். ஒருவேளை பிரஸ்சிடம் மட்டும்தான் இப்படி சொல்கிறாரா? அல்லது நிஜத்திலேயே அப்படியா என்பதை அவ்வளவு எளிதில் யூகிக்க முடியவில்லை. பட்…

சிம்புவை பற்றி கவுதம் கொடுக்கும் சர்டிபிகேட்டை காட்டி, சிம்புவுக்கு ஒரு குடும்ப லட்சனமான பெண்ணே கூட பார்த்துவிடலாம் போலிருக்கிறது. அப்படியொரு சர்டிபிகேட். என்னை பொருத்தவரை சிம்புவுக்கு இருக்கிற திறமைக்கு இன்னும் அவர் நிறைய பேரை போய் சேரணும். எப்படி மெருகேத்தினாலும் அப்படியே உள் வாங்கிக்கிற விசேஷம் அவரோட சேர்ந்திருக்கு. அவருக்கு கேமிரா எங்க வருதுன்னு நடிக்கும் போதே தெரியுது. 1,2,3 ல் இருக்க அவருக்கு தகுதியிருக்கு. இவரைப் போல ஒரு நடிகருக்கு இந்த இடம்தான் தருவோம்னு யாரும் சொல்லிடக் கூடாது. நீங்களா எடுத்துக்கங்கன்னு சொல்லணும். அதுதான் என் விருப்பம் என்று கூறியிருக்கிறார் கவுதம்.

அவரை வைத்து படம் எடுத்த எந்த இயக்குனர்களும் இப்படியொரு குட் சர்டிபிகேட் கொடுத்ததேயில்லை சிம்புவுக்கு. கவுதம் கொடுக்கிறார் என்றால், ஒன்று… அவருக்கு சம்பள பாக்கியிருக்க வேண்டும். அல்லது இன்னும் கொஞ்ச நாள் ஷுட்டிங்குக்கு அவர் தேவைப்பட்டிருக்க வேண்டும். அந்த ரகசியத்தை நாம் அறியாவிட்டாலும், கவுதமின் காதோர நரை முடி அறியும். படத்தை முடிக்கறதுக்குள்ள இன்னும் நிறைய பாராட்டுங்க கவுதம்!

1 Comment
  1. shiva says

    Enna paper kuda therila nengalam ivlo pesavy kudathu . Thaaa Ne ivlo pesuriyea ne Ena avlo yokiya P*** ya . Cine field ivlo multi talent oda Evan kamal ku aduthu ivar thn article elutha vita ena nalum soldrathu . kuda irunthu pathiya Ithan Pandraru nu .. fulla therinchitu article eluthungada .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தம்பிக்கு சினிமா, அண்ணனுக்கு எதும்மா? விஜயகாந்த் பேமிலியின் விளையாட்டு!

முதல் தகவல் அறிக்கையை சற்று ஜாக்கிரதையாக சொல்ல வேண்டியிருக்கிறது. கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் இன்னும் சில தினங்களில் ஒரு பிரஸ்மீட் வைக்கப் போகிறாராம். அப்பாவிடம்...

Close