அலேக் ஆகிறார் அட்லீ! சவுக்கை சுழற்றும் சங்கம்!

0

சட்டை அதேதான். பட்டன்தான் வேற வேற… என்று பல் இளிக்கிறது அட்லீயின் கதைகள். விஜய் கையிலிருந்தால் எதை சொன்னாலும் வெற்றி என்ற நிலை இருக்கும் போது காப்பியடிக்க என்ன தயக்கம்? இந்த ஒரு சமாதானத்தை வைத்துக் கொண்டு சமஸ்தானத்தையே வளைத்துவிட்டார் அட்லீ.

அவரது ராஜா ராணி படம் மவுனராகம் படத்தின் மறுபதிப்பு. சத்திரியன்தான் படம்தான் தெறி. அபூர்வ சகோதரர்கள் ப்ளஸ் மூன்று முகம் இரண்டின் கலவைதான் மெர்சல். இந்த நான்கு படங்களையுமே ரீமேக் பண்ணுவதற்காக தயாராகி வந்தார்களாம் சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள். இந்த நேரத்தில் இவர் கதையை உருவி கதக்களி ஆடிவிட்டதால் அத்தனையும் போச்.

விடுவார்களா? எல்லாரும் ஒன்று கூடி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டார்கள். எங்களுக்குரிய நஷ்ட ஈடு அட்லீயிடமிருந்து வசூல் செய்து தர வேண்டும் என்பதுதான் பிராது. சாத்வீகமாக கேட்டால் சத்தியமாக பதில் வராது என்பதால் பிராதுவை கையில் வைத்துக் கொண்டு அட்லீயை பிராண்டுகிற முடிவுக்கு வந்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.

இத்தனைக்கும் சங்கத்தின் செயலாளர் கதிரேசன்தான் ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக் உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தாராம். பஞ்சாயத்து கூடிவிட்டது. இன்று மாலை தயாரிப்பாளர் சங்கத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறாராம் அட்லீ.

உங்க நாலாவது முகத்தை காட்டுங்க. அப்பதான் திருட்டுக் கதைக்காக அவர் வாங்கிய பல கோடி சம்பளத்தில் பாதியையாவது பிடுங்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.