அட்லீயால் தர்ம சங்கடம்! மனம் நொந்த விஜய்!

0

இளம் வயது துணிச்சல் இருக்கே… அது எருது கொண்டையில் பூ வைக்க சொல்லுமாம்! அப்படிதான் துள்ளிக் கொண்டிருக்கிறார் அட்லீ. மிக இளம் வயதில் அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் விஜய் படத்தை இயக்குவது. அதுவும் ஒரு முறை மட்டுமல்ல… இரண்டாவது முறையும் அந்த பாக்கியத்தை அவருக்கு வழங்கிய விஜய்யே, ‘ஐயய்யோ தப்பு பண்ணிட்டேன்’ என்று வாய்விட்டு புலம்புகிற அளவுக்கு போனதாம் நிலைமை!

கடந்த பத்து நாட்களாக செம டென்ஷனில் இருக்கிறார் விஜய். “சார்… நீங்கதான் அவரை உள்ள கொண்டு வந்தீங்க அந்த ஒரே காரணத்தால்தான் அவர் மீது அதிகம் கோபப்படாம இருக்கோம். இனிமேலாவது பார்த்து நடந்துக்க சொல்லுங்க” என்று முக்கியமானவர்கள் சிலர் விஜய்யின் காதில் ஒரு விஷயத்தை போட்டதும் கடும் அதிர்ச்சிக்குள்ளானாராம் அவர். ஒருவேளை தவறான செய்தியாக இருக்குமோ என்று அக்கம் பக்கத்தில் விசாரித்தால், ஆமாம் சார். ஆமாம் என்றார்களாம் அவர்கள்.

அப்படியென்ன செய்துவிட்டார் அட்லீ. அது வெளியில் சொல்கிற மாதிரியான விஷயம் இல்லை என்பதுதான் இப்போதைய க்ளூ! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப்படம் வெள்ளிவிழா கண்டால் கூட இனிமேல் அட்லீயை அருகில் சேர்க்க மாட்டார் விஜய். அந்தளவுக்கு நொந்து போயிருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.