மதிக்கலேன்னா மிதிப்பீங்களோ? அஸ்திவாரத்தை உலுக்கிவரும் ‘ஆத்திர ’ராஜ்!

2

‘சர்கார் ’ கதை திருட்டு விவகாரம் ஒரு வழியாக உச்சக்கட்டத்துக்கு வந்துவிட்டது. முருகதாசின் முந்தைய ரெக்கார்டு(?) ‘இந்தாளு செஞ்சுருப்பாருய்யா’ என்று பேச வைத்தாலும், சர்கார் விவகாரத்தில் அவர் மீதும் கொஞ்சம் நியாயம் இருப்பதாகவே படுகிறது. ‘இந்த கதைக்கும் அந்த கதைக்கும் கள்ள ஓட்டு போட்டான்ங்கிற ஒரு ஒற்றுமை தவிர வேற ஒண்ணுமே இல்ல. அந்த ஒரு ஒற்றுமையும் ஒத்த சிந்தனைதான்’ என்று என்று தெள்ளந் தெளிவாக புலம்பிவிட்டார். கிட்டதட்ட அதையேதான் திருப்பிச் சொல்கிறார் பாக்யராஜ்.

‘முருகதாசின் திரைக்கதை ட்ரீட்மென்ட்டே வேற வேற. ஆனால் கள்ள ஓட்டுக்கு பின்னாடி ஹீரோ ஒரு முடிவெடுக்குறான். அதுதான் ஸ்பார்க். அந்த ஸ்பார்க்கை முருகதாஸ் வருண் ராஜேந்திரனிடமிருந்து திருடிட்டார்’ என்கிறார் இவர்.

இந்த பிள்ளையார் முருகன் மாம்பழ சண்டையில் யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ, இல்லையோ? அது அவரவர் பாடு. ஆனால் நடுவில் நுழைந்த பாக்யராஜ், பஞ்சாயத்து சொம்புல பாதியை வாய்க்குள் திணித்துக் கொண்டு பாட்டு பாடுவதுதான் கொடூரம்.

தானும் ஒரு இயக்குனர், தயாரிப்பாளர், ஒரு ஹீரோவின் அப்பா, ஒரு டி.வி சீரியல் நடிகையின் கணவர் என்கிற தம்மாத்துண்டு லாஜிக் கூட இல்லாமல் ‘இதுதான் சர்கார் கதை. இது வருணுடைய கதை’ என்று மொத்தத்தையும் புட்டு புட்டு வைப்பது எந்த வகையில் சேர்த்தி? அதுவும் சர்கார் படத்தின் கிளைமாக்சை துளி கூட லஜ்ஜையே இல்லாமல் அவர் விலாவாரியாக சொல்வதெல்லாம் திட்டமிட்ட தாக்குதல் என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது.

பொதுவாக தன்னை மதிக்காத சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தலைவர்கள் வைக்கிற முள் ட்ரீட்மென்ட்தான் இது. ஆனால் பாக்யராஜ் போன்ற வாழ்நாள் ஜாம்பவான்கள் செய்கிற வேலையா இதெல்லாம்?

மழைக்காலம் போயிருச்சேன்னு குடையை உடைச்சு வைக்கறதும், வெயில்காலம் போச்சேன்னு வேர்குரு பவுடரை கொட்றதும் நல்ல புத்தி உள்ளவங்களுக்கு அழகு இல்ல! சினிமா குடும்பத் தலைவரே, தெரிஞ்சுக்கோங்க. புரிஞ்சுக்கோங்க!

2 Comments
  1. CHARLES says

    டேய்….. காசு வாங்கி கொண்டு எதையாவது வாந்தி எடுக்காதே…. காப்பி கேவலம் விஜய் & முருகதாஸ் கதை திருடியதை ஒப்புக்கொண்டு விட்டார்கள். நீ சும்மா மூடிக்கிட்டு போடா.

  2. Tamilanda says

    appdy podu mathava

Leave A Reply

Your email address will not be published.