பைரவா ரிலீசுக்கு முன் இப்படியொரு புயல்? கீர்த்திசுரேஷ் பேமிலிக்கு இவ்ளோ தந்திரம்!

0

ஒரு ஹீரோ அண்டை மாநிலத்திலும் தன் செல்வாக்கை நிரூபிக்கிறார் என்றால், அவர்தான் சூப்பர் ஸ்டார். அதற்கு துப்பில்லாதவர் சுமார் ஸ்டார்தான். ரஜினிக்கு இருக்கிற மாதிரியே அத்தகைய ஆரவாரத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் ரசிகர்களுக்கு தருகிற இன்னொரு தமிழ் ஹீரோ விஜய். இவருக்கு தெலுங்கு, மலையாளம் இரண்டு ஏரியாவிலும் ரசிகர்களும், கலெக்ஷனும் நிறைய நிறைய.

இந்த முறை வரப்போகும் ‘பைரவா’ படத்திற்காக கேரளாவில் இருக்கும் எல்லா தியேட்டர்களையும் நிரப்பிவிட துடிக்கிறார் கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ். (அப்ப அது விஜய்க்காக இருக்காது. கீர்த்திக்காக இருக்கும்) அதற்காக அவர் வகுத்த தந்திரம்தான் பலே பலே…

கடந்த சில வாரங்களாகவே கேரளாவில் புதுப்படங்களை ரிலீஸ் பண்ண மாட்டோம் என்று முரண்டு பிடித்து வருகிறார்கள் தியேட்டர்காரர்கள். கமிஷன் பர்சன்ட்டேஜ் உயர்த்தித்தர வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை. இந்த பிரச்சனையை ஈசியாக பேசித் தீர்க்க வேண்டியவர் அம்மாநில சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் கீர்த்திசுரேஷின் அப்பாவுமான சுரேஷ், பிரச்சனை ஜவ்வாக இருக்கிறாராம். ஏன்?

பைரவா வந்திட்டும் போகட்டும்னு காத்திருக்கோங்க என்று நாஞ்சில் சம்பத் மாதிரியா போட்டு உடைப்பார்? பேசிகிட்டு இருக்கோம். பிரச்சனை முடியல என்றே சொல்லி வருகிறாராம். பொங்கல் வரைக்கும் இப்படியே நீடிச்சா, புதுப்படம் என்று பைரவா மட்டும்தான் திரைக்கு வரும். அண்டை மாநில படத்திற்கு இந்த கமிஷன் பஞ்சாயத்தெல்லாம் கிடையாதாம். அதனால்தான் இப்படி.

வியூகம் வகுக்குறாய்ங்க. அந்த வியூகத்தை ஊரே வியக்கும்படி கூட்றாய்ங்க!

Leave A Reply

Your email address will not be published.