பத்து மிலியனை நோக்கி பைரவா ட்ரெய்லர்! அப்படியே இன்னொரு சந்தோஷம்

1

பைரவா என்று பெயர் வைத்த நாளிலிருந்தே விஜய் ரசிகர்களின் உற்சாகம், கரை புரண்டு ஓட ஆரம்பித்துவிட்டது. கதை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ, என்று ஆளாளுக்கு ஃபீல் ஆகி தனித்தனி கதையாக எழுதித் தள்ளிவிட்டார்கள். இருந்தாலும், இதுவரை இல்லாத விஜய் படம் போல, புது மூட்டையை பிரிக்கவிருக்கிறார் டைரக்டர் பரதன். இப்படத்தின் விறுவிறுப்பை கொதிக்கிற அடுப்பிலிருந்து கொஞ்சத்தை இறக்கி வைத்தது போல ட்ரெய்லரில் இறக்கி வைத்துவிட்டார் அவர்.

ஒரு முழுமையான படத்திற்கான முன்னோட்டம்தான் அது என்று குஷியாகிக் கிடக்கிற விஜய் ரசிகர்கள், அந்த ட்ரெய்லரையும் ஒரு சாதனைக்குள் கொண்டு வந்துவிட நினைத்திருக்கலாம். வெளியான இரண்டே நாளில் ஐந்து மிலியன் பார்வையாளர்களை தொட்டுவிட்ட பைரவா ட்ரெய்லர் அடுத்தடுத்த நாட்களில் அந்த வேகம் குறையாமல் பத்து மிலியனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் அந்த அடிஷனல் இனிப்பு.

படத்தை பார்த்த சென்சார் அமைப்பு க்ளீன் யூ வழங்கிவிட்டது. இப்படத்தின் வியாபாரம் துவங்குகிற போது, படத்திற்கு யு/ஏ கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை. அதனால் வரிவிலக்கு விஷயத்தில் எங்களை நெருக்கக் கூடாது என்று விநியோகஸ்தர்களிடம் கூறியிருந்தார்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து. ஆனால் நினைப்புக்கு மாறாக இப்படத்திற்கு யு கிடைத்திருப்பது பெரும் குஷியை வரவழைத்திருக்கிறது விநியோகஸ்தர் வட்டாரத்திற்கு.

1 Comment
  1. கஸாலி says

    நம்ம சென்சார் போர்டைப் பற்றி தெரியாதா? பெரிய ஆட்களுக்கு யூ கொடுப்பதும், சிறிய, புதிய ஆட்களுக்கு வேண்டுமென்றே ஏ, யூஏ கொடுப்பதும் தொடர்ந்து நடந்துகொண்டுதானே இருக்கு.
    நேர்மைய்யாவது ஒண்ணாவது.

Leave A Reply

Your email address will not be published.