இந்த கொடுமைக்கு இவிங்க வேற…?

0

இனியும் ‘தாரை தப்பட்டை’ குறித்து விமர்சித்தால், பாலாவால் வார்த்தெடுக்கப்பட்ட பிதாமகன் ஸ்டைல் ஆசாமிகள் பின் மண்டையை கடித்து வைத்தாலும் ஆச்சர்யமில்லை. இருந்தாலும் “இவிங்கல்லாம் வேலை பார்த்த படமாப்பா இப்படி?” என்று பேச ஆரம்பித்திருக்கிறது சினிமாவிலேயே இருக்கும் ஒரு வளவள கோஷ்டி. என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

பொதுவாக பாலா தன் படத்திற்காக கதை எழுதினால், யாரையும் துணைக்கு வைத்துக் கொள்ள மாட்டார். அவரே தனியாக உட்கார்ந்து யோசித்து யோசித்து எழுதுவாராம். அதற்கப்புறம் அது பற்றி பெரிதாக விவாதிக்கவும் மாட்டார். ஒருவேளை அந்த படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணனோ, ஜெயமோகனோ வசனம் எழுதும் பட்சத்தில் அவர்களிடம் மட்டும் அந்த கதை குறித்து சில பல விஷயங்களை விவாதிப்பாராம். இந்த முறை அந்த வழக்கத்தையெல்லாம் விட்டொழித்துவிட்டு முதல் முறையாக சில புத்திசாலிகளை அழைத்து கதை விவாதம் நடத்தியிருக்கிறார்.

அந்த புத்திசாலிகள் யார்? டைரக்டர்கள் கார்த்திக் சுப்புராஜும், சூதுகவ்வும் நலன் குமாரசாமியும்தானாம். சுமார் ஒரு வாரம் இவர்கள் இருவரும் பாலாவுடன் குப்பை கொட்டியிருக்கிறார்கள். சிலபல விஷயங்களை படத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கூறினார்களாம். அதெல்லாம் படத்தில் வந்ததா? இவர்கள் டிஸ்கஷன் எடுபட்டதா? அதற்கப்புறம் வந்ததுதான் இந்த முகரை மொழுக்கட்டையா என்ற கேள்விக்கெல்லாம் ஒரு பதிலும் இல்லை.

என்ற போதிலும், மேற்படி இயக்குனர்களை எங்கு பார்த்தாலும், களுக்கென சிரித்துவிட்டு நடையை கட்டுகிறது அந்த வளவள கோஷ்டி. இருடீய்… இரு. எங்க பால் மறுபடியும் கொதிக்கும். அப்ப வச்சுக்குர்றோம்…

Leave A Reply

Your email address will not be published.