தாடி பாலாஜியை தப்பிக்க வைக்குமா தி.மு.க?

0

பெரிய திரையால் தோற்கடிக்கப்பட்டாலும், சின்னத்திரையால் நிரம்பி வழிகிறார் தாடி பாலாஜி. அன்றாட வருமானம். ஆயிரக்கணக்கான ரசிகர்கள். நிம்மதியாக இருந்து தொலையலாம் அல்லவா? மனைவி நித்யா மீது சந்தேகப்பட்டு, அவரை தினந்தோறும் அடித்தும் உதைத்தும் நிம்மதியை குலைந்து வந்தார் அவர்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று காத்திருந்த நித்யா, பாலாஜி மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார். பல பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடர்ந்த போலீஸ், என்ன காரணத்தினாலோ இன்று வரை கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது. எவ்வளவு நாளைக்கு செல்லுபடியாகும் இந்த எஸ்கேப்பிசம்? ஒரு நிரந்தர பாதுகாப்பு வேண்டும் என்று நினைத்த பாலாஜி, அறிவாலயத்தில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டாராம்.

அங்கு என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டதோ, ஆனால் இன்னும் சில தினங்களில் அவர் திமுக வில் தன்னை இணைத்துக் கொள்வார் என்று யூகங்கள் சிறகடிக்கின்றன. வடிவேலுவுக்கு நேர்ந்த கதி, பாலாஜிக்கு நேராது என்று நம்புவோம். ஏன்?

அவருக்கு சினிமாவுல எப்போ வாய்ப்பு இருந்திச்சு, இப்ப திமுக வால் பறிபோக?

Leave A Reply

Your email address will not be published.