ஏனிந்த பாராமுகம்? எல்லாம் நயன்தாராவால்தான்!

0

பெரிய பெரிய ஹீரோக்களெல்லாம் மண்ணை கவ்வுகிற காலத்தில் ஒரு படம் ஓடுவதென்பதே திருவாரூர் தேரை சுண்டுவிரலால் இழுப்பதற்கு சமமான சாதனைதான்! அண்மையில் தனி ஒருவன் படம் அந்த சாதனையை நிகழ்த்தி தமிழ்சினிமாவின் எல்லா தரப்புக்கும் லாபம் தந்தது. (அப்படியிருந்தும் அந்த படத்திற்கு ஒரு பெரிய வெற்றி விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. அது ஏன்? என்பதை தனியாக இன்னொரு செய்தியில் சொல்வோம்)

தனி ஒருவனுக்கு சற்றும் குறையாத வெற்றியை தந்திருக்கிறார் ‘நானும் ரவுடிதான்’ பட இயக்குனர் விக்னேஷ்சிவன். தியேட்டர்களுக்கு வரும் பொதுமக்கள் வாய்விட்டு சிரித்து நோய்விட்டுப் போவதை கண்கூடாக காண முடிகிறது. பத்திரிகைகளும் ஊடகங்களும் பெரிதாக கைதட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில்தான் அந்த அதிர்ச்சியும் அவலமும்.

தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் ஒருவர் கூட விக்னேஷ்சிவனுக்கு போன் செய்து பாராட்டவே இல்லையாம். ஏன்? எல்லாம் நயன்தாராவின் மீதிருக்கும் கோபம்தான்.

நயன்தாராவின் தற்போதைய நட்பு பொசிஷன் எப்படி? அஜீத் ஆக மாட்டார். விஜய் வேண்டாம். சூர்யா கார்த்தி பேமிலியே நயன்தாராவுக்கு சேராது. ஜெயம் ரவி பேமிலியில் நயன்தாரா புயல் அடித்து ஓய்ந்ததே இப்போதுதான். சிம்பு சிவ பக்தன் ஆனதே நயன்தாராவால்தான். ஆர்யாவுடன் நயன்தாரா பேசியே அநேக மாதங்கள் ஆகிவிட்டது. இப்படி சுற்றி சுற்றி பகை சேர்த்து வைத்திருக்கும் நயன்தாராவை பாராட்டுவதும் ஒன்றுதான். விக்னேஷ் சிவனை பாராட்டுவதும் ஒன்றுதான்.

அதனால்தான் பாரா முகம் ஆகிவிட்டார்களாம் இவர்கள்.

வீடு தேடி வந்திருக்கும ஒரு வெற்றியை மனம் விட்டு பாராட்டாத ஹீரோக்கள், வெறித்தனமாக உழைப்பதும் இதுபோன்ற ஒரு வெற்றிக்காகதான். என்னவொரு விந்தை?

Leave A Reply

Your email address will not be published.