பாவனாவுக்கு நேர்ந்த பயங்கரம்! பிற நடிகைகள் மவுனம்! இதுதான் உங்க பெண்ணியமா கேர்ள்ஸ்?

0

திருவனந்தபுரம் என்ன தென் அமெரிக்காவிலேயா இருக்கு? …ந்தா. காரில் போய் இறங்குகிற தொலைவுதான். அங்கு நடந்த ஒரு பயங்கரத்திற்கு இந்த நிமிடம் வரைக்கும் பெண்ணிய வாதிகளோ… சக நடிகைகளோ… கண்டனம் தெரிவிக்காத நிலையில், அந்த பயங்கரம் மீண்டும் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? கவலையோடு இந்த சம்பவத்தை நோக்க ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள்.

நடந்தது இதுதான்.

கடந்த 36 மணி நேரத்திற்கு முன் படப்பிடிப்பிலிருந்து வீடு திரும்பிய நடிகை பாவனா தனது கார் டிரைவராலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். பழைய கார் டிரைவரால் பணிக்கு வரவழைக்கப்பட்ட இந்த புதிய டிரைவரும் அவருடன் வந்த வேறு இரண்டு நபர்களும் சுமார் இரண்டு மணி நேரம் பாவனாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல… அவரை விதவிதமான கோணங்களில் படமும் எடுத்திருக்கிறார்கள்.

எப்படியோ அவர்களிடமிருந்து தப்பிய பாவனா, காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் இருவர் கோவையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழில் சித்திரம் பேசுதடி, கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களில் நடித்திருக்கும் பாவனா இன்னமும் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது தம்பி தமிழில் பட்டினப்பாக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஆனாலும் பாவனாவை ஏதோ ரிட்டையர்டு நடிகை போல நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு எதிராக ஒரு நடிகை கூட குரல் கொடுக்கவில்லை.

இதுதான் உங்க பெண்ணிய முழக்கமா கேர்ள்ஸ்?

Leave A Reply

Your email address will not be published.