பிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை! ஓவியா ரிட்டர்ன்?
அநேகமாக ஜுன் மாதம் பிக் பாஸ் 2 துவங்கப்படும் என்கின்றன அதிகாரபூர்வமற்ற தகவல்கள். அதற்குள் வகை தொகையோடு வசவு பாட தயாராகி வருகிறாராம் கமல். கடந்த முறையே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப சீட்டாக பயன்படுத்திய கமல், இந்த முறை அதை வைத்துக் கொண்டே வீட்டுக்கு வீடு ஓட்டு வேட்டையாடிவிடுவது என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.
இதனால் ஆளுங்கட்சி வட்டாரம்தான் அப்செட் என்கிறார்கள். சில பெரும் தலைகள், நேரடியாக விஜய் டி.வி யிடமே பேசி, இந்த நிகழ்ச்சியிலிருந்து கமலை தூக்கிவிடுகிற முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்களாம். ஆனால் டி.வி நிர்வாகம் அவ்வளவு மொக்கையா என்ன? பெரும் தொகையை அட்வான்சா கொடுத்துட்டோம். அக்ரிமென்டும் போட்டாச்சு. இனி பின் வாங்க முடியாது என்று கூறிவிட்டதாம்.
சரி… இந்த செகன்ட் இன்னிங்ஸ் யார் யாரையெல்லாம் உள்ளே கொண்டுவரப் போகிறது? தற்போதைக்கு ஜெயம் ரவி, ஆர்யா இருவரிடமும் பேசி வைத்திருக்கிறார்களாம். பழைய செட்டில் மீண்டும் ஓவியாவை மட்டும் உள்ளே கொண்டுவருவது என்றும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இந்த முறை ஒரு நல்ல காரியம் நடந்திருக்கிறது. பிக் பாஸ் முதல் பகுதிக்கு வசனம் எழுதியவர்கள் நீக்கப்பட்டு புது இளைஞர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். எனவே… இழுவை இருக்காது. க்ரிஸ்ப்… க்ரிஸ்ப். அதுதான் முதல் அஜண்டாவாம்.
கமல்ஹாசனை நாற்காலியில் உட்கார வைக்கதான் எத்தனை எத்தனை ஏற்பாடு?