பிக்பாஸ் சீசன் 2 சூர்யாவும் இல்லை, விஜய்யும் இல்லை! பின்னே வேற யாரு?

0

கமல்ஹாசனின் கடுந்தமிழை மீறி வென்ற சீரியல் பிக்பாஸ். ஆனால் மழலையே மகிழ்ச்சி என்பதைப்போல, கமலே இந்த சீரியலின் நிறைந்த அம்சம் ஆகியிருந்தார். கோடானு கோடி ரசிகர்களை மகிழ்வித்த பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களில் நிறைவுற்றது. இந்த வெற்றியில் பாதி கமலுக்கு போய் சேர வேண்டும் என்றால், அதை விளம்பரப்படுத்திய விதம், லப்பை சப்பை நடிகர்களை வைத்துக் கொண்டு நிகழ்ச்சியை ஹிட்டாக்கிய சாதுர்யம் எல்லாம் விஜய் டி.வி யின் தனித்திறமை.

இந்த வெற்றி இனிமேல் விஜய் டி.வி யை சும்மாயிருக்க விடுமா? பிக்பாஸ் சீசன் 2 க்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்களாம். கமல் போல இந்த நிகழ்ச்சியை நெறியாளப் போவது யார்? இந்த கேள்வி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

விஜய்யை வளைத்துவிட்டார்கள். சூர்யாவை மடக்கிவிட்டார்கள் என்றெல்லாம் செய்திகளை இறக்கை கட்டி பறக்கின்றன. ஆனால், டி.வி தரப்பில் அரவிந்த்சாமியிடம் தொடர்ந்து பேசி வருகிறார்களாம். அநேகமாக பிக்பாஸ் சீசன் 2 அரவிந்த்சாமி கைகளுக்கு போனால் ஆச்சர்யமில்லை.

Leave A Reply

Your email address will not be published.