பாபி சிம்ஹா நடிகை ரேஷ்மி காதல்! நவம்பரில் திருமணம்?

0

ஐயோ பாவம் சினிமாக்காரர்கள்… வந்த தும்மலை கூட சுதந்திரமாக தும்மிவிட முடியாது. அந்த தும்மலுக்குள் மார்க்கெட் இருக்கும். சம்பளம் இருக்கும். பிரஸ்டீஜ் இருக்கும். இன்னும் என்னென்னவோ இருக்கும். அப்படிதான் பெரும் இக்கட்டில் தவிக்கிறார் சிம்ஹா. இவருக்கும் இவர் நடித்துக் கொண்டிருக்கும் உறுமீன் படத்தின் நாயகி ரேஷ்மி மேனனுக்கும் காதல். குறுகிய கால காதலாக இருந்தாலும், நன்றாக இறுகிய காதலாக மாறியதால், அதை கல்யாணத்தில் முடிக்கவே ஆசை கொண்டாராம் சிம்ஹாவும்.

வழக்கம் போலவே அந்தஸ்து, ஜாதி போன்ற வேறு பல இக்கட்டுகள் குறுக்கே நிற்க, கனடாவில் இருக்கும் ரேஷ்மியின் அக்கா முடியவே முடியாது என்று குறுக்கே நின்றாராம். எப்படியோ இடைவிடாத முயற்சியால் அந்த அக்காவையும் சம்மதிக்க வைத்து, ரேஷ்மியின் குடும்பத்தையும் சம்மதிக்க வைத்திருக்கிறார் பாபி சிம்ஹா. இருவீட்டார் சம்மதத்துடன் நவம்பரில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இருந்தாலும் 13 படங்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த திருமணத்தை ஒப்புக் கொள்வதில் சிக்கல் வந்திருக்கலாம். தன்னை தொடர்பு கொண்டு இது தொடர்பாக விளக்கம் கேட்கும் நிருபர்களிடம், ‘சேச்சே… அப்படியொரு ஐடியாவே இல்ல. யாரோ தப்பா கிளப்பி விட்ருக்காங்க’ என்கிறாராம்.

உலகத்தில் பிறக்கும் எந்த கோழி முட்டையும் ஒன்று சமையல் ஆகணும், இல்லேன்னா கோழிக்குஞ்சாகணும்! பாபி-ரேஷ்மி காதல் விஷயத்தில் என்ன கொடுத்து வச்சுருக்கோ? நவம்பர் வரைக்கும் வெயிட் பண்ணுவோம்…

Leave A Reply

Your email address will not be published.