மீசையை ஒதுக்குறேன்னு மூக்கை நறுக்கிக் கொண்ட பாபிசிம்ஹா!

0

மீசையை ஒதுக்குறேன்னு மூக்கை நறுக்கிக் கொண்ட பாபி சிம்ஹா பற்றிதான் கைகொட்டி சிரிக்கிறது ஊர். யாரோ ஒரு போலீஸ் அதிகாரியின் நட்பை, தன் திமிருக்கு ஊறுகாயாக தொட்டுக் கொண்ட பாபி, தன்னை வைத்து படம் எடுத்த அக்னிதேவி தயாரிப்பாளரை ஓட ஓட விரட்டிய கதைதான் ஊருக்கே தெரியுமே!

தன் தரப்பு நியாயத்தை கூட சொல்ல முடியாமல் தலைமறைவான தயாரிப்பாளர் கம் இயக்குனர், தயாரிப்பாளர் சங்கத்தின் பேருதவியோடு மீண்டும் வந்திருக்கிறார். இவர் மீது கொடுத்த புகாரை முதலில் வாபஸ் வாங்குங்க. மற்றதை பேசிக்கலாம் என்று கேட்டுக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்தை கொஞ்சம் கூட மதிக்காத பாபி, அந்த கூட்டத்தில் நடந்து கொண்டதெல்லாம் தெனாவட்டின் உச்சம் என்கிறார்கள்.

அதற்கப்புறம் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் தலைமையில் சென்னை நகர காவல் ஆணையரை சந்தித்து இதில் இருக்கிற உண்மை மற்றும் வில்லங்கங்களை எடுத்துரைத்தனர். சரியாக புரிந்து கொண்ட ஆணையர், பாபி சிம்ஹா கொடுத்த புகாரை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். அதற்கப்புறம் நடந்ததுதான் செம ட்விஸ்ட். பாபிசிம்ஹாவால் சுமார் 3 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இவ்வளவுக்கு பிறகும், படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்த படத்தில் அவமானப்படுத்திவிட்டதாக பிளேட்டை திருப்பிப் போட்டிருக்கிறார் பாபிசிம்ஹா. இதில் வரும் மதுபாலாவின் கேரக்டர் ஜெ.வின் சாயல் என்று கூறினால், அந்த ஜெயலலிதாவே சமாதியை விட்டு வெளியே வந்து செருப்பால் அடிப்பார். அப்படியிருக்க ஏன் பிரச்சனையை திசை திருப்புகிறார் பாபி?

ஜெயலலிதா புகழுக்கு களங்கம்னு சொன்னா ஒட்டு மொத்த அதிமுகவும் உடனே வந்து தீக்குளிக்கும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ? அட… அசமஞ்சமே!

Leave A Reply

Your email address will not be published.