Browsing Category

விமர்சனம்

வெண்ணிலா வீடு விமர்சனம்

‘என் தங்கம் என் உரிமை’ என்று வீட்டுக்கு வீடு வந்து உசுப்பிவிடும் விளம்பரங்களுக்கு மத்தியில் ‘போங்கடா... நீங்களும் உங்க தங்கமும்’ என்று உரக்க சொல்கிறது வெண்ணிலா வீடு. கோடம்பாக்கம் எங்கிலும் நகைச்சுவை படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.…

தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்- விமர்சனம்

‘தெரியாம நடிக்க வந்திட்டேன்’ என்பதை போல ஆரம்பகாலங்களில் அச்சுறுத்தி வந்த விஜய் வசந்த், ‘என்னமோ நடக்குது’ மூலம் மனசுக்கு நெருக்கமாகியிருந்தார். அவரது குடும்பத்திற்கே பழக்கப்பட்ட ‘தவணை முறை’ திட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சினிமாவின்…

யான்- விமர்சனம்

கொண்டை ஊசி கிடைக்கலேன்னு கோணி ஊசிய சொருகிக் கொண்ட மாதிரி, கே.வி.ஆனந்த் ஸ்டைல் படத்தை ரவி.கே.சந்திரன் இயக்கியிருக்கிறார். இருவருமே ஒளிப்பதிவு மேதைகள்! நல்லவேளை... ஆனந்த் நிரூபித்துவிட்டார். சந்திரனுக்குதான் ‘கிரகணம்!’ ஒரு சுவாரஸ்யமான…

மெட்ராஸ்- சுயநல அரசியலுக்குப் பலியாகும் ஒரு சமூகத்தின் கதை ‘ விடுதலை சிறுத்தைகள் ’ செய்தி தொடர்பாளர்…

பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது. ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா…

ஜீவா – விமர்சனம்

ரிக்க்ஷாகாரரிலிருந்து ரிச் மேன்கள் வரைக்கும், காறி உமிழ்ந்து கவலைப்பட்ட விஷயத்தைதான் ஆழ இறங்கி அகழ்வராய்ந்திருக்கிறார் சுசீந்தரன். ‘ஏன்தான் இப்படி சொதப்புறாங்களோ?’ என்று டி.வி பெட்டிக்கு முன் அமர்ந்து இதயம் வெடித்த கோடானு கோடி ரசிகர்களின்…

அரண்மனை- விமர்சனம்

‘ஆவி’ பறக்கிற சூட்டுடன் வந்திருக்கும் மற்றுமொரு படம்! கேன்டீனில் இனி பர்கர், பாப்கானுடன் முடிகயிறு, தாயத்து, எலுமிச்சை பழம் விற்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், பருப்பு வேகலேன்னு பாயாசம் கவலைப்பட்ட காலம் இல்லை இது. சி.ஜி…

மைந்தன் – விமர்சனம்

தமிழ்சினிமாவின் அகன்ற சந்தைகளில் ஒன்று மலேசியா! மலேரியா வரவழைக்கும் நம்ம ஊரு மொக்கை படங்களை கூட, மலேசியாவில் கொண்டாடுவார்களாம் தமிழர்கள். ‘நம்ம ஆளுங்க எடுத்த படம். ஓட்டிருவோம்டா...’ என்கிற பெருத்த மனசு காரணமாக இருக்கலாம்! அப்படியாப்பட்ட…

ஆடாம ஜெயிச்சோமடா- விமர்சனம்

தெரிந்தேதான் வைத்திருக்கிறார்கள் இப்படியொரு தலைப்பை! சேப்பாக்கம் கிரவுண்டை விட்டு இந்த கதை வெளியே வருமான்னு தெரியலையே என்கிற அச்சத்தோடு உள்ளே போனால், ‘ஆடாம ஜெயிப்போமடா’ என்று படத்தை வேறொரு சந்துக்குள் தள்ளிக் கொண்டு போகிறார் இயக்குனர்…

வானவராயன் வல்லவராயன் / விமர்சனம்

தமிழ்சினிமாவில் ‘தர மாஸ்’ என்றொரு அடையாள வார்த்தை இருக்கிறது. விநியோகஸ்தர்களுக்கு ரொம்ப பிடித்தமான வார்த்தை அது. வானவனும் வல்லவனும் அந்த வார்த்தையைதான் மெய்யாக்க முயல்கிறார்கள். கதர் ஜிப்பா ஆசாமிகள், கருந்தாடிக்குள்ளிருந்து…

சிகரம் தொடு விமர்சனம்

மோனல் கஜ்ஜார் என்ற மூடு பனியை, மார்கழி மாதத்திற்கு முன்பே தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்த UTV யை வணங்கி இந்த விமர்சனத்தை துவங்குவதுதான் சாலப்பொருத்தம்! படத்தில் முதல் சில பல ரீல்களிலேயே உயரத்தில் அமைந்திருக்கும்…

பட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்

விஜய் என்ற சுறாவை மேய்த்துவிட்டு ஒரேயடியாக நெத்திலிக்கு இறங்கியிருக்கிற எஸ்.பி.ராஜ்குமாரின் படம்! ‘சுறா பெரிசா, நெத்திலி பெரிசா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டு கிர்ர்ர்ர்...ராக தேவையில்லை. நெத்தியடியாக இருக்கிறது இந்த நெத்திலி! படம் முடிந்து…

பொறியாளன்- விமர்சனம்

பென்னி குவிக் மாதிரி பெயரெடுக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கட்டிட பொறியாளனை ‘தண்ணி தவிக்க’ வைக்கிறது விதி. இரண்டு கோடி பணத்தை ஏமாந்து அதை இரண்டே நாளில் மீட்டெடுக்க வேண்டிய அவசரத்திலிருக்கும் அவன், என்னவெல்லாம் பாடு பட்டு, எதிராளிக்கு…

அமரகாவியம்- விமர்சனம்

கட்டி அணைப்பதாக நினைத்துக் கொண்டு எலும்பை நொறுக்கி விடுகிற அறியாமை காதலுக்கு மட்டும்தான் உண்டு. அப்படியொரு காதலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு காதல் ஜோடியை பற்றிய கதைதான் ‘அமரகாவியம்’. ‘பூமரத்துக்கு கீழே, புழுக்கத்துக்கு ஏது வேல?’…

மேகா- விமர்சனம்

தமிழ்சினிமா, கத்தி முனையில் ரத்தம் பூசிக் கொள்கிற கேடு காலம் இது. நல்லவேளையாக கவலை போக்கும் நகைச்சுவை ட்ரென்ட் படங்களும் நடுநடுவே நுழைந்திருப்பது ரசிகனின் பூர்வஜென்ம புண்ணியம்! இந்த களேபரங்களுக்கு இடையில், மழையில் நனைந்த ஈர வானம் போல…

சலீம்- விமர்சனம்

ஒரு சுள்ளான் பயில்வான் ஆகிற கதையெல்லாம் பார்த்து சலிச்சாச்சு. இவருமா? கையில் துப்பாக்கியோடு இருக்கும் விஜய் ஆன்ட்டனியின் ஸ்டில்களை பார்த்தால் அப்படிதான் கிலியடிக்கிறது நமக்கு. தியேட்டருக்குள் நுழைந்த முதல் முக்கால் மணி நேரம் சத்திய சோதனை!…

சிவப்பு எனக்கு பிடிக்கும்- விமர்சனம்

துணிக்கடைக்கு பாண்டி பஜார், டூ வீலர் பார்ட்சுக்கு புதுப்பேட்டைன்னு தேவைக்கு தகுந்த மாதிரி இடங்களை பிரித்து வைத்திருப்பதை போல ‘அந்த’ மேட்டருக்கும் ஒரு ஏரியாவை ஒதுக்க பழகுங்கப்பா என்று தனது பெருத்த தேகத்தோடு மன்றாடியிருக்கிறார் இயக்குனர்…

புதியதோர் உலகம் செய்வோம்- விமர்சனம்

அஞ்சான் வந்த கையோடு வந்திருக்கிறது இந்த லஞ்சான்! ‘லஞ்சத்தை முதலில் வீட்டிலேயிருந்தே ஒழி..., நாடு தானாக திருந்தும்’ என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பேச்சிலிருந்து இந்த ஒரு போதனையை மட்டும் உருவி கதையாக வடித்து படமாக…

அஞ்சான்- விமர்சனம்

‘அண்டர் வேல்டு’ கதைகளில் எல்லாம் ஒரு அண்டர் ‘ஓல்டு’ தத்துவம் இருக்கும்! அது...? ‘துரோகிக்கு மருந்து, தொண்டைக்குழியில துப்பாக்கிதான்’ இந்த படத்திலும் அப்படி சில துரோகிகளை பந்தாட கிளம்புகிறார் சூர்யா. சமயத்தில் தியேட்டருக்குள்ளேயும்…

கதை திரைக்கதை வசனம் இயக்கம் -விமர்சனம்

கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச…

சினேகாவின் காதலர்கள் விமர்சனம்

‘காதல், ஒருமுறைதான் பூக்கும்’ என்கிற ஒருதலை ராக சென்ட்டிமென்ட்டையெல்லாம் உடைத்து தள்ளியிருக்கிறார் அறிமுக இயக்குனர் முத்துராமலிங்கன். ‘அவனுக்கு முன்னாடி உன்னை பார்த்திருந்தேன்னா உன் லவ்வை ஏத்துகிட்டு இருந்திருப்பேன்’ என்று சினேகா…