சிவகார்த்திகேயனிடம் சிக்கிய சினி போலீஸ்!

0

அடுத்தவர்களின் நித்திரையை களவாடுவதில் அப்படியென்ன ஆனந்தமோ? கொல்லை பக்கமாக கூட அல்ல. தெருப் பக்கமாகவே வந்து திருட ஆரம்பித்திருக்கிறார்கள் சில சினி பொறுக்கிகள். கடந்த பல வருடங்களாகவே தியேட்டரில் வைத்து திருட்டு விசிடி எடுக்கும் பொர்க்கீஸ்களின் அட்டகாசம் தற்போது இன்னும் ஜாஸ்தியாகிவிட்டது. இத்தனைக்கும் எந்த தியேட்டரில் இந்த பிரிண்ட் எடுக்கப்பட்டது என்பதை அறியும் வசதிகள் வந்துவிட்டன.

அப்படி அண்மையில் வெளியான படங்கள் பல பல! சில தினங்களுக்கு முன் வந்த ‘பரியேறும் பெருமாள்’ கூட தப்பவில்லை. தார்மீக ரீதியாக இந்தப்படத்தில் கை வைக்கக் கூடாது என்று நினைக்காத அந்த அரக்கர்கள் மற்ற படங்களை விட்டு வைப்பார்கள் என்பதே மூடத்தனம்தான். இருந்தாலும் வயிறு எரியுதே?

சரி மேட்டருக்கு வருவோம். சில வாரங்களுக்கு முன் வந்த ‘சீமராஜா’ படத்தை பெங்களூரில் இருக்கும் சினி போலீஸ் என்ற சினிமா தியேட்டரில் வைத்து படம் பிடித்திருக்கிறார்கள். திருட்டு விசிடி பிரிண்ட் எங்கு வைத்து களவாடப்பட்டது என்பதை அதிகாரபூர்வமாக ஆராய்ந்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கடும் அதிர்ச்சிக்கு ஆளானாராம். இதே போல விருந்தாசலத்தில் அமைந்திருக்கும் ஒரு தியேட்டரிலும் சீமராஜா எடுக்கப்பட்டுள்ளது. திருடர்களை ஆதாரத்தோடு பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம், சட்டரீதியாக வழக்கு தொடுக்க முடிவெடுத்திருக்கிறது.

ஒரு தியேட்டரின் மீது 10 கோடி கேட்டு வழக்கு தொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

சீமராஜா ஊமை ராஜா இல்லேன்னு நிரூபிக்க ஒரே வழி, தூக்குன சாட்டைய இறக்காம இருக்கறதுதான். வீசுங்க சிவகார்த்திகேயன்!

Leave A Reply

Your email address will not be published.