வீட்டை அடியோடு துடைத்து(?) எஸ்கேப்! ஹீரோவுக்கு நடிகை கொடுத்த அதிர்ச்சி!

0

ஊரே ‘விஸ்வாசம்’ ‘பேட்ட’ குஷியில் இருக்க… நம்பிக் கட்டுன பொண்ணு இப்படி நடு மண்டையில குட்டிட்டாளே… என்று கதிகலங்கிப் போயிருக்கிறார் ஒரு ஹீரோ. இவர் ஊரிலில்லாத சமயத்தில் கள்ளக் காதலனுடன் ஓடி விட்டாராம் நடிகை. அதுவும் வீட்டிலிருக்கிற அத்தனை விலை உயர்ந்த பொருட்களையும் அடித்து சுருட்டிக் கொண்டு. காதலியும் போய், கைநிறைய சேர்த்து வைத்த பொருளும் போய் கனத்த இதயத்துடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஹீரோ.

வெகு சிலர் மட்டுமே அறிந்த இந்த சம்பவம், காதலியே கதி என்று கிடக்கும் சினிமாக்கார்களுக்காக இங்கே விலாவாரியாக!

‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தில் அறிமுகமாகி அதற்கப்புறம் ஒரு சில படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவருக்கும் ‘பட்டதாரி’ படத்தின் கதாநாயகி அதிதி மேனனுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ரகசியமாக திருமணமும் செய்து கொண்டார்கள். சென்னையில் ஒரே வீட்டில் கடந்த ஒரு வருஷமாக குடியிருந்தும் வந்தார்கள். அந்நியோன்யமான கணவன் மனைவி தங்களுக்கும் வருங்காலத்திற்கும் என்னவெல்லாம் சேர்த்து வைப்பார்களோ, அவற்றையெல்லாம் ஓடி ஓடி சேர்த்து வைத்தாராம் அபி சரவணன்.

இல் வாழ்க்கை நல் வாழ்க்கையாக போய் கொண்டிருக்கும் போதுதான் இவர்களின் வாழ்வில் இம்சையாக நுழைந்திருக்கிறார் சுஜித். அபி சரவணனுக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தார்களாம். ஊரில் எங்காவது மழை, வெள்ளம், புயல் என்றால் ஓடி ஓடி ஹெல்ப் பண்ணும் வழக்கமுள்ள அபி, அடிக்கடி வெளியூருக்கு கிளம்பி விடுவது இந்த காதல் ஜோடிகளுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

படப்பிடிப்புக்காக கடந்த மாதம் வெளியூர் போயிருந்த அபி, சில நாட்கள் கழித்து வீடு திரும்பியிருக்கிறார். வெளியே பெரிய பூட்டு மட்டும் தொங்கியதாம். அதிதிக்கு போன் செய்தவருக்கு எதிர்முனையிலிருந்து எந்த ரெஸ்பான்சும் வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த அபி, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றால், பொட்டு குப்பை கூட இல்லை. வீடே முற்றிலும் வழிக்கப்பட்டிருந்ததாம். பெருத்த முயற்சிக்குப்பின் அதிதியை தொடர்பு கொண்ட சரவணனுக்கு, டாடா…பை பை சொல்லப்பட, பேரதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார் அவர்.

ஆத்தோட போயிடுச்சு கிணத்து வெள்ளம். அடிபட்டு துடிக்குது அபியோட உள்ளம்! இதுதாண்டா இன்ஸ்டன்ட் காதல்!

Leave A Reply

Your email address will not be published.