ஸ்டிரைக்கை உடைக்க ரஜினி பிளான்! கந்தலாகும் கணக்குகள்?

Cinema Strike Going To End?

0

நண்டு கதையை நாட்டுக்கு சொன்ன தலைவரே இந்த நண்டுகளுக்கு தீனி போடலாமா? என்று அழுது குலுங்குகிறது கோடம்பாக்கம்.

தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம், இந்தளவுக்கு கட்டுக் கோப்பாக இருக்கும் என்று அந்த கலைத் தாயே கூட நினைத்திருக்க மாட்டாள். உள் குத்து, மறைமுக மங்காத்தா கேம், நேரடி குட்டிக்கரணம் இப்படி தமிழ்சினிமாவுக்குள் இருக்கும் அத்தனை நொட்டாங் கைகளும் சேர்ந்து தானாக இந்த ஸ்டிரைக்கை ஊற்றி மூடிவிடுவார்கள் என்று நினைத்திருந்தவர்களுக்கு, கடும் ஷாக். சினிமா போஸ்டர் கூட ஒட்டக் கூடாது என்று தடுத்துவிட்டது சங்கம்.

பொறுக்குமா? எப்படியும் முறியடித்தே தீருவது என்று கிளம்பியிருக்கிறது ஒரு குரூப். இமயமலை செல்வதற்கு முன் ரஜினியிடம் பேசிய சங்கம், ‘இந்த வேலை நிறுத்தத்துக்கு உங்கள் ஆதரவு வேணும். காலா ரிலீஸ் கூட திட்டமிட்டபடி நடக்காம போகலாம். என்ன செய்வது?’ என்று கேட்க, ‘எல்லாருக்கும் நல்லது நடக்குதுன்னா தள்ளிப் போறதுல தப்பில்ல’ என்று கூறியிருந்தார் அவர்.

அது போன வாரம். இது இந்த வாரம். யெஸ்… இமயமலையிலிருந்து திரும்பிய ரஜினி, ‘வேலை நிறுத்தத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. சீக்கிரம் ஸ்டிரைக் முடியணும்’ என்று தன் கருத்தை சொல்லிவிட்டு நடையை கட்டினார். நடுவில் நடந்ததென்ன? என்னென்னவோ சொல்கிறார்கள் இங்கே.

‘இந்த ஸ்டிரைக் இன்னும் ஒரு மாதம் நடந்திச்சுன்னா, எல்லா படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகும். பெரும் குழப்பம் ஏற்படலாம்’ என்று சொன்னவர்கள், ‘இப்பவே ஸ்டிரைக்கை முடிக்கணும்னா உங்க ஒத்துழைப்பு தேவை’ என்று ரஜினியை அணுகினார்களாம். எல்லாருமாக கூடி பேசியதை அடுத்து சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டனவாம்.

அதன்படி ரிலீசுக்கு தயாராக இருக்கும் டிக் டிக் டிக், பாஸ்கர் தி ராஸ்கல் என்ற இரண்டு படங்களையும் தடையை மீறி வெளியிடுவது. அதற்கு க்யூப் நிறுவனம் முழு சப்போர்ட் செய்யும் என்பதுதான் அந்த முடிவு. ஒரு செங்கல்லை உருவினால், மொத்த பில்டிங்கும் பணால் என்பதுதான் தெரிந்த விஷயமாச்சே?

இந்த, நடுவில் உருவி நாசமாக்கும் வேலைக்கு ரஜினி தன் பரிபூரண ஆசியை அளித்துவிட்டதாக கேள்வி. சில தினங்களுக்கு முன் கமல்ஹாசனை சந்தித்துவிட்டு, அடுத்து ரஜினியை சந்தித்து நிலைமையை விளக்க காத்திருந்த விஷாலுக்கு, அந்த ஆண்டவனே வந்து ஆட்டத்தை கலைப்பதை கேட்டு பெரும் அதிர்ச்சியாம்.

நண்டு கதையை நாட்டுக்கு சொன்ன தலைவரே இந்த நண்டுகளுக்கு தீனி போடலாமா? என்று அழுது குலுங்குகிறது கோடம்பாக்கம்.

அதாண்டா ஆன்மீக அரசியல்!

Leave A Reply

Your email address will not be published.