பேட்ட, விஸ்வாசம் மோதல் உறுதியானது!

2

பொங்கலுக்கு பராக்… பேட்ட!

இப்படியொரு அறிவிப்பால் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் ஜனவரி பொங்கல், ‘டுடே பொங்கல்’ ஆகிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு சறுக்கல் ஏற்பட்டாலும், அதில் ஒரு பெருக்கல் குறியை போட்டு லாபம் பார்த்துவிடுகிற யுக்தி அந்த நிறுவனத்திற்கு மட்டுமே சாத்தியம். அதைதான் சர்கார் விஷயத்தில் கவனித்தோமே?

சும்மாயிருந்த வாயெல்லாம் கூட கூட சர்கார் சர்கார் என்று முணுமுணுக்கிற அளவுக்கு விட்டு விட்டார்கள். கலெக்ஷன் விஷயத்தில் சர்காருக்கு சறுக்கல் என்று பேசிய அத்தனை பேருக்கும் ஷாக். இன்றைய நிலவரப்படி வாங்கியவர்களுக்கும், படத்தை தயாரித்தவர்களுக்கும் கூட சர்கார் லாபம்தான்! (லாபத்தின் அளவு வேண்டுமானால் முன்னே பின்னே இருக்கலாம்)

இப்போது பராக் முறை. சர்கார் போல தனியாக வரவில்லை பேட்ட. கூடவே அஜீத்தின் விஸ்வாசம் வருகிறது. இந்த முறை ஜெயிக்காவிட்டால் அஜீத் ரசிகர்களே வீட்டில் கல்லெறிவார்கள் என்பதை அறிந்தே வைத்திருக்கிறார் சிவா. சும்மா விடுவாரா? சும்மா செதுக்கிக் கொண்டிருக்கிறாராம். இவ்விரு படங்களும் ஒரு சில நாட்கள் கேப்- விட்டு வரக்கூடும்.

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்தான் பிரச்சனை. கட் அவுட் வைப்பதில் துவங்கி பால் ஊற்றி குலவை போடுவது வரைக்கும் ரஜினி, அஜீத் ரசிகர்களுக்கு நடுவில் உரசல் வர வாய்ப்புள்ளது. காவல் துறையின் பாடுதான் கண்டதுண்டம்!

ஆமா… ரஜினி எப்படி அஜீத்தை எதிர்க்க ஒப்புக் கொண்டார்? தானும் யூத்துன்னு காட்டணுமில்ல?

2 Comments
  1. இன்பத்தமிழன் says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பேட்ட மாபெரும் வெற்றி பெற இருக்கிறது. உனது பொறாமை எண்ணம் எங்களிடம் நிறைவேறாது. வயித்து எரிச்சலில் போயி சாவு டா.

    ரஜினி எப்படி அஜீத்தை எதிர்க்க ஒப்புக் கொண்டார்? தானும் யூத்துன்னு காட்டணுமில்ல?
    அஜித் ஒரு பால்வாடி கேசுடா.

  2. Mohammed Sheik says

    பேட்ட – சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மற்றுமொரு மாபெரும் வெற்றி படைப்பு.

Leave A Reply

Your email address will not be published.