ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா? புதுக்கட்சி கதி என்ன?

0

கடந்த ஒரு வாரமாகவே ராகவேந்திரா மண்டபத்தின் தலைக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாக தகவல் பரவிக்கிடப்பதால், நாடெங்கிலும் உள்ள ரஜினி அபிமானிகளுக்கு குழப்பம். மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட ராஜு மகாலிங்கத்தை “சற்றே அமைதியாக இருங்க தம்பி…” என்று ரஜினி கட்டளையிட்டு விட்டதாகவும் தகவல். இதையடுத்து வரப்போகும் புதுக்கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் அநியாயத்துக்கும் தொய்வு என்கிறார்கள் இங்கே.

என்ன நடந்தது? ரஜினி சாட்டையை சுழற்றியதாக வரும் தகவல்கள் உண்மைதானா?

திடீரென டார்ஜிலிங்கில் நடந்து வரும் கார்த்திக் சுப்புராஜ் படத்திலிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் ரஜினி.  வந்தவர் தாட் பூட்டென சிலரிடம் கோபப்பட்டாராம். அவரது கோபத்திற்கு காரணமே கட்சி பொறுப்பாளர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள்தானாம். கட்சி விஷயங்களில் தன்னை தவிர தனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் தலையிடக் கூடாது என்பது ரஜினியின் ராஜ கட்டளை. ஆனால் அண்மைக்காலமாக அது மீறப்பட்டு வருவதாகவும், சில இடங்களில் டிமாண்ட் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இது உடனுக்குடன் ரஜினியின் காதுக்கு போக, சட்டென எல்லாவற்றையும் நிறுத்த உத்தரவிட்டதாக கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல… ராகவேந்திரா மண்டபத்திலேயே கட்சி அலுவலகம் ஒன்று புதிதாக கட்டப்படும் வேலைகள் துவங்கியதாம். அதையும் அவர் நிறுத்தச் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

கட்சி தொடர்பாக வரும் ரசிகர்களின் கடிதங்களில், தலைவா… நீங்க நல்லவர்தான். ஆனால் உங்க மனைவி வாங்குன கடனை கொடுக்கலேன்னு எங்களை பிற கட்சிக்காரங்க கிண்டல் பண்றாங்க. அது மனவேதனையை தருது. முதல்ல வீட்டை சரி பண்ணுங்க என்றும் எழுதி வருகிறார்களாம். இது கூட ரஜினியின் அப்செட்டுக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

ரஜினி ஆன்ட்டி வைரஸ் ஆக இருக்கலாம். ஆனால் கெட்டுப்போன சொந்த சிஸ்டமே ஆன்டி வைரஸ்சை கவலைப்பட வைத்தால்… ஓ. டூ மச் சேட்!

Leave A Reply

Your email address will not be published.