இதற்கு பெயர்தான் கனெக்ட் ஆவறதா? சிவகார்த்திகேயனை வைத்து ஒரு சடுகுடு!

0

ஜெயிச்சவன் அப்பளத்தை உடைச்சாலும், அதற்கும் ஒரு கலிங்கத்துபரணியை பாடி சந்தோஷப்படும் உலகம்! இப்படி நின்றால்.. நடந்தால்… சிரித்தால்… முறைத்தால் கூட அதற்கும் ஒரு அர்த்தம் வைத்து ஆனந்தப்படும் வரிசையில் தம்பி ராமய்யா மகன் உமாபதியும் இணைந்து கொள்வதில் தப்பேயில்லை. ஏன்? வியப்பதற்கு எதுக்குய்யா தயக்கம்?

உமாபதி நடிப்பில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் உருவாகி வருகிறது. பேசிக்கலாகவே நன்றாக டான்ஸ் ஆடும் உமாபதியிடம் ஒரே ஒரு குறையை கண்டுபிடித்தாராம் டான்ஸ் மாஸ்டர். “டான்ஸ் ஆடுறது விஷயமில்ல. அப்படி ஆடும்போது ஆடியன்சோட கனெக்ட் ஆகனும்ப்பா” என்றாராம். அதெப்படி கனெக்ட் ஆகறது என்கிற விஷயம் மட்டும் உமாபதிக்கு புரியவேயில்லை. அப்போதுதான் டி.வி யில் சிவகார்த்திகேயனின் ஊதாக்கலரு ரிப்பன் பாடல் ஓடிக் கொண்டிருந்தது.

உமாபதியுடன் நான்கே வயது நிரம்பிய அவரது சகோதரி மகளும் பாடலை ரசித்துக் கொண்டிருந்தாளாம். ஒரு வரியில் சிவகார்த்திகேயன் ஏதோவொரு சேஷ்டை செய்ய…. அப்படியே வெட்கத்துடன் வீட்டுக்குள் ஓடினாளாம் அந்த சிறுமி. ஓஹோ… இதுதான் ஆடியன்சோட கனெக்ட் ஆகுறதா? என்று அப்போதுதான் உரைத்ததாம் உமாபதிக்கு. அப்புறம்…? அதாகப்பட்டது மகாஜனங்களே பாடல் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்காவது வெட்கம் வந்தால் அதற்கு காரணம் உமாபதியல்ல…. சிவகார்த்திகேயனும் அவர் கற்றுக் கொடுத்த ஆடியன்ஸ் கனெக்டிங் சிஸ்டமும்தான்!

Leave A Reply

Your email address will not be published.