சினிமா ஹீரோ ஆகிறார் மியூசிக் டைரக்டர் டி.இமான்! யார் டைரக்டர்?

0

‘அறம்’ என்ற பெயரிலேயே ஒரு படம் ரிலீசுக்கு தயாராக இருக்க, ‘அறம் செய்து பழகு’ என்று இன்னொரு படம் வந்தால் மண்டை குழம்புமா? குழம்பாதா? நல்லவேளை… அந்த ஆபத்திலிருந்து ரசிகர்களை காப்பாற்றினார் டைரக்டர் சுசீந்திரன். ‘அறம் செய்து பழகு’ என்ற தலைப்பை நீக்கிவிட்டு, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று தன் படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டார். இந்த பெயர் மாற்றத்தையே ஒரு பாடல் வெளியீட்டு விழா போல சுசீந்திரன் நடத்தியதுதான் காலத்தின் கட்டாயம்.

நிகழ்ச்சியில் ஹீரோ சந்தீப் கிஷன், விக்ராந்த், துளசி, இசையமைப்பாளர் டி.இமான், அப்புக்குட்டி உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட பலரும் மேடையில் நிறைந்திருக்க… ‘ நான் இப்ப ஒரு பாம் போடப் போறேன்’ என்று அறிவித்தார் சுசீந்திரன்.

அது? நிஜமாகவே பாம்தான்!

“இந்தப்படத்திற்கு அப்புறம், புதுமுகங்களை வச்சு ஒரு படத்தை இயக்கப் போறேன். ஓ… காதல் கண்மணி மாதிரியான படம். அதில் டி.இமானைதான் ஹீரோவாக நடிக்க வைக்கப் போறேன்” என்று கூற, மேடையிலிருந்த இமான் முகத்தில் படு பயங்கர அதிர்ச்சி. ‘முடியாது…’ என்பது போல அவர் சைகை செய்ய, அது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை சுசீந்திரன்.

சூரியை விடவும் ஒல்லியாக காணப்படும் இமான், பேலியோ டயட்டில் உடம்பை குறைத்தாரோ, அல்லது பட்டினி கிடந்து இளைத்தாரோ? அது காணாமல் போன அந்த சதைக்கே வெளிச்சம்! ஆனால் இமான் ஒல்லியானதால்தான் சுசீந்திரன் இப்படியொரு முடிவுக்கு வந்தார் என்பது அந்த சதைக்கு தெரிந்தால், ஒருவேளை சந்தோஷப்பட்டிருக்குமோ?

Leave A Reply

Your email address will not be published.