ஐயோ… சிவகார்த்திகேயனின் தலையிலேயும் கைய வச்சுட்டாங்களே…!

0

பெட்டிக்கடையில் நிற்கும் போது கூட அறிந்தவர்கள், தெரிந்தவர்களை பார்த்தால், “அண்ணே… சூப்பரா ஒரு லைன் இருக்கு. ரஜினிக்கு ஆப்ட்டா இருக்கும். கேக்குறீங்களா?” என்று தனது ஸ்கிரீன் பிளேவை அவிழ்த்து விடும் உதவி இயக்குனர்களை குறை சொல்லி பயனில்லை. யாராவது ஒருவரால் கூட விளக்கு ஏற்றப்படலாம் என்கிற நம்பிக்கையின் ஆற்றாமை அது!

இந்த கெட்டப்பழக்கத்தால் யார் யாருக்கு எங்கெல்லாம் சங்கடம் வருகிறது என்று நூல் பிடித்தார் போல அதன் பின்னால் போனால் புரியும். இந்த கதையை கேட்கிற ஒருவர் அதை எங்காவது சொல்லி, அது வேறு யார் காதிலாவது விழுந்து, எப்படியோ யாரோ ஒரு இயக்குனரின் கதை விவாதக் குழுவுக்குள் சீன்களாக போய் தஞ்சம் அடைந்துவிடும். அது படமாகி வெளியே வரும்போது, “ஐயய்யோ…. என் கதையை அடிச்சுட்டான்” என்று அதே பெட்டிக் கடையில் நின்று கதற வேண்டியிருக்கும்.

உதவி இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, ஒன்றிரண்டு படங்களை இயக்கியவர்களுக்கு கூட அப்படியொரு சிக்கல் வந்தால், நிலைமை என்னாவது?

மச்சக்காரன் என்ற படத்தை இயக்கிய தமிழ்வாணன் என்பவர் இயக்குனர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கிறாராம். விரைவில் திரைக்கு வரப்போகும் வேலைக்காரன் என்னுடைய கதையை திருடி எடுத்திருப்பதாக அறிகிறேன். சங்கம் தலையிட்டு எனக்கு உரிய இழப்பீடு வாங்கித்தரணும் என்று அதில் கூறியிருக்கிறாராம்.

ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அது என்னுடைய கதை என்று உறுதியாக சொல்வது எப்படி? ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்தக்கதை சிவகார்த்திகேயனுக்கு போனது எப்படி? இந்த கேள்விகளுக்கெல்லாம் புலனாய்வு செய்தாவது நிஜத்தை கண்டுபிடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இயக்குனர் சங்கத்திற்கு இருக்கிறது.

கண்ணா… ரெண்டு லட்டை எடுத்து வாயில அடைங்க! விஷயம் சிம்பிள்…

Leave A Reply

Your email address will not be published.