எல்லோருடனும் அன்பா இருங்க! விஜய் ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ்!

1

விஐபி2 படத்தின் சக்சஸ் மீட்! முகத்தில் உற்சாகத்துடன் வந்திருந்தார்கள் தனுஷும், சவுந்தர்யாவும். அதைவிட பெரிய உற்சாகத்திலிருந்தார் தயாரிப்பாளர் தாணு. வசூல் கொட்டுது… என்று பேச ஆரம்பித்தார் தாணு. அவர் கொடுத்த புள்ளி விபரங்கள், இன்காம்டேக்ஸ் அதிகாரிகளை உசுப்பிவிடுகிற அளவுக்கு இருக்க…. இந்த காம்பினேஷன் மீண்டும் மீண்டும் ரிப்பீட் ஆகுமோ என்கிற சந்தேகமே வந்துவிட்டது பிரஸ்சுக்கு.

தனுஷ் விஐபி2 பற்றி சற்று அதிகமாகவே பேசினார். நியாயமா படத்தின் ஹீரோ ஜெயிச்சு, வில்லி தோற்கறதாதான் முடிவு இருக்கணும். ஆனால் ஆணும் பெண்ணும் சமம்னு சொல்ல நினைச்சேன். அதனாலதான் காஜலும், நானும் நண்பர்களாகிடுற மாதிரி அந்த க்ளைமாக்ஸ் வந்திச்சு. படத்தில் சில இடங்களில் திருக்குறளை பயன்படுத்த முடிஞ்சுது. அதுக்கு அர்த்தத்தையும் அப்படியே சொல்லியிருக்கலாமே என்று சிலர் கேட்டாங்க. அப்படி சொல்லியிருந்தா, யாரும் அதற்கான அர்த்தத்தை தேடிப்பிடிச்சு படிச்சுருக்க மாட்டாங்க என்றார் தனுஷ்.

இறுதியாக, ஒரு பெண் பத்திரிகையாளர் மீது, விஜய் ரசிகர்கள் அசிங்க அர்ச்சனை நடத்தியது பற்றி கேட்கப்பட்டது. பதிலளித்த தனுஷ், “இந்த உலகத்தில் அன்பு ஒன்றுதான் நிரந்தரமானது. உண்மையானது. தயவு செஞ்சு எல்லாரும் ஒருவருக்கொருவர் அன்பா இருக்கணும். நெகட்டிவ் எண்ணங்கள் வேண்டவே வேண்டாம். இந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமா நெகட்டிவ் ஸ்பேஸ்சை நோக்கி போயிட்டு இருக்கு. மழை இல்லை. மரங்கள் இல்லை. குளோபல் வார்மிங் பெரிசா இருக்கு. இன்னும் கொஞ்ச நாளில் தண்ணி என்னவா கிடைக்கும்னு தெரியல. ஒருத்தருக்கொருத்தர் அன்பு செலுத்தினால் மட்டும்தான் இயற்கை நம் மீது திரும்ப அன்பு செலுத்தும். அதை புரிஞ்சுக்கோங்க… என்றார் மனம் உருக!

புரிஞ்சுதா விஜய் பேன்ஸ்?

1 Comment
  1. Len says

    Before 2 years, Ajith fans abused Singer Chinmayi in the same way. Will your advice and Dhanush’s advice be applicable to them too?

Leave A Reply

Your email address will not be published.