தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்! ஆல் ரவுண்டர் ஆனார் தனுஷ்!

1

ஹீரோவாக மட்டுமல்ல… ஒரு நல்ல தயாரிப்பாளராகவும், டைரக்டராகவும் அழுத்தமாக கோடு போட்டுவிட்டார் தனுஷ். இன்னாருன்னு தெரியாதவங்க கூட ‘மன்னாருடா நான்’னு மார்தட்டுற காலத்துல… செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு சிவனேன்னு இருக்கிற வித்தை தனுஷை விட்டா மறுபடியும் தனுஷூக்குதான் வாய்க்கும் போலிருக்கிறது.

தமிழில் மட்டுமல்ல… அண்டை மாநில மொழிகளான தெலுங்கு இந்தி போன்ற ஏரியாவிலும் தனுஷுக்கு என தனி அந்தஸ்து கொடுத்து வருகிறது அந்தந்த மாநில சினிமாக்கள். ஏன்? இவர் தமிழில் நடித்த பல படங்கள் அங்கு டப்பிங் செய்யப்பட்டு ஓடுவதுதான். இந்தியில் அவர் நேரடியாக நடித்த படங்கள் மிக மிக முக்கியமானவை என்பதாலும் தனுஷின் கொடியில் கலர் கலராக கவர்ச்சியும் கவுரவமும் மின்னுகிறது.

இந்த கலைப்பசி அடங்காது என்று அவர் மலையாளத்திலும் மைண்ட் வைக்க ஆரம்பித்திருக்கிறார். ம்ம்முட்டி தயாரிப்பில் உருவான கம்மத் அன்டு கம்மத் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த தனுஷ், அப்படியே மலையாள படங்களை தயாரிக்கும் வேலைகளிலும் இறங்கிவிட்டார். சில படங்களை வாங்கி கேரளாவில் வெளியிடுகிற எண்ணத்திலும் இருக்கிறார். முக்கியமாக அருண் கே. டேவிட் இயக்கிய லட்டு என்ற படத்தையும் வாங்கி, தமிழிலும் மலையாளத்திலும் வெளியிடப் போகிறாராம்.

மச்சம் வொர்க்கவுட் ஆகும்போது, மலையாளமா இருந்தா என்ன? கன்னடமா இருந்தா என்ன? பணத்தை அள்ளி படத்துல போடுங்க தனுஷ்.

1 Comment
  1. Suriya says

    All the Best Dhanush

Leave A Reply

Your email address will not be published.