சின்னக் குழந்தையெல்லாம் ‘செஞ்சுருவேன்’னு சொல்லுதே! தனுஷுக்கும் அது கவலைதானாம்!

மாரி படத்தில் தனுஷ் அடிக்கடி சொல்லும் அந்த பஞ்ச் டயலாக், “செஞ்சுருவேன்”! கொடுமை என்னவென்றால், இந்த ‘செஞ்சுருவேன்’ டயலாக்கை சின்னக் குழந்தைகள் கூட அடிக்கடி உச்சரிப்பதுதான். நேற்று வசமாக சிக்கிய தனுஷிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி மேல் கேட்க, அவர்களுடன் படு கேஷுவலாக அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டார் தனுஷ்!

“சார்… ‘மாரி’ மாதிரியான படத்தை நான் இப்ப பண்ண மாட்டேன். நடுவில் விதவிதமான கேரக்டர்களில் நடிச்சுட்டு மறுபடியும் மாரி பார்ட் 2 எடுப்பேன். அப்ப நீங்க சொன்ன இந்த விஷயத்தை மனசுல வச்சுக்குறேன். சின்னக்குழந்தைகளைல்லாம் அந்த டயலாக்கை சொல்றாங்கன்னு நானும் கேள்விப்பட்டேன். நம்மள மாதிரி இருக்கிற சுமார் மூஞ்சி குமார்கள் ஏதாவது செஞ்சுதான் ரசிகர்களை கவர வேண்டியிருக்கு. என்ன பண்ணுறது சொல்லுங்க?” என்றார்.

மாரி பார்ட் 2 ஐடியா இருப்பது மாதிரியே வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 பற்றியும் ஒரு ஐடியா இருக்கிறதாம் அவருக்கு. அப்ப விரைவில் ரிலீஸ் ஆகப்போற தங்கமகன் விஐபி பார்ட் 2 இல்லையா? “சத்தியமா இல்லங்க. இந்த படம் வேற. ஒரு கமர்ஷியல் படத்துல என்னெல்லாம் இருக்குமோ, அதெல்லாம் இதுல இருக்கும். புதுசா ஒரு கதையை இனிமே யோசிக்கவே முடியாது. ஆனால் விதவிதமா சீன் வைச்சு ரசிக்க வைக்கமுடியும். தங்கமகன் எல்லாரும் ரசிக்கிற படமா இருக்கும்” என்றார் தனுஷ்.

தனுஷிடம் பேசும்போது, சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கப்படும் அந்த விஷயம் பற்றி பேசாமலிருக்க முடியுமா?

தங்கமகன் படத்தில் உங்க பேர் தமிழ்செல்வன். ட்ரெய்லரில், “தமிழை யாராலும் அழிக்க முடியாது”ன்னு நீங்க பஞ்ச் டயலாக் பேசும்போது, பின்னணியில் ஸ்டோரி, ஸ்கிரீன் பிளே, டயலாக், டைரக்ஷன்னு தன் பெயரை இங்கிலீஷ்ல போடுறாரே டைரக்டர்?

சற்று திணறிதான் போனார் தனுஷ். ஆமாம் சார். நாங்க கவனிச்சுருக்கணும். கவனிக்காம விட்டுட்டது தப்புதான். அதுக்கு மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்குறேன் என்றார்! அதற்கப்புறம் தனுஷ் பேசிய பல விஷயங்கள் ஆஃப்த ரெக்கார்ட் மேட்டர்ஸ். அதை எழுதுனா சிக்கலாச்சே?

1 Comment
  1. Harinath says

    தங்கமகன் படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கோவனுக்கு ஒரு நீதி! சிம்புவுக்கு ஒரு நீதியா?

நேற்றிலிருந்தே இந்தக் குரல் மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு இன்னொரு நீதி என்பது நமது நாட்டில் சகஜமாக புழங்கி வரும் நிலையில்,...

Close