40 கோடியா? கஷ்டம்.. கஷ்டம்… தனுஷை டென்ஷன் ஆக்கும் டைரக்டர்

0

தெரிந்தோ தெரியாமலோ வாக்குறுதி கொடுத்துவிட்டு, நாக்குத் தள்ளிப்போய் கிடக்கிறார் தனுஷ். இறைவிக்கு முன்னால், பின்னால் என்று இரண்டு பகுதிகளாக பிரித்தால், கார்த்திக் சுப்புராஜின் அந்தஸ்தில் அநியாய உச்சத்தையும் அநியாய இறக்கத்தையும் பார்க்கலாம். இறைவிக்கு பின், படு படு பாதாளத்திற்கு போன கார்த்திக் சுப்புராஜின் மார்க்கெட் நிலவரம், மீண்டும் அவர் ஹிட் கொடுத்தால்தான் தேறும் என்பது பொதுவான நிலைமை.

இந்த நேரத்தில்தான் இறைவிக்கு முன்பு, நாம ஒரு படம் பண்ணலாம் என்று கூறியிருந்தார் தனுஷ். இந்தப்படத்தை உடனே ஆரம்பித்துவிடலாம் என்று கனவு கண்ட கா.சு வுக்கு, கண் கட்டு வித்தை காட்டிவிட்டது யதார்த்தம். பார்க்கலாம்… இப்போ வேணாம்… அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார் தனுஷ்.

ஒரு வழியாக மனம் இறங்கி, சரி கதை சொல்லுங்க. பட்ஜெட் சொல்லுங்க என்று கேட்ட போதுதான் வேதாளம், வெறி கொண்டு எழுந்திருக்கிறது. மறுபடியும் முதுகெலும்பு நொறுங்குகிற மாதிரி ஒரு பட்ஜெட் சொன்னாராம் கார்த்திக் சுப்ராஜ். அதாவது தனுஷ் சம்பளம் இல்லாமல் நாற்பது கோடி.

அதிர்ந்து போன தனுஷ், இதுக்கு முன்னாடி நீங்க ஒழிச்ச தயாரிப்பாளர்களின் ரத்தபலி போதாதுன்னு நம்ம காம்பவுன்ட் வரைக்கும் வந்துட்டீங்களா? என்று டென்ஷன் ஆனதுடன், அவ்ளோ பட்ஜெட்னா நீங்க கிளம்பலாம் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இப்போது பட்ஜெட்டை குறைக்க படு பயங்கர திட்டமிட்டு ஸ்கிரிப்ட் பேப்பரை உருவ ஆரம்பித்திருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ். தனுஷ் கிடைப்பாரா? தாயம் உருளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Leave A Reply

Your email address will not be published.