தனுஷும் த்ரிஷாவும் ஜோடியா வர்றாங்க! தரிசனத்துக்கு ரெடியா மக்களே…?

0

படத்தை எடுத்தோம்… நல்ல விலைக்கு தள்ளிவிட்டோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அப்படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு கலகலப்பு ஊட்டுகிறாரே… அதற்காகவே தனுஷுக்கு தொண்டை வலிக்க வலிக்க ஒரு ஓ… போடலாம். மனுஷன் அவ்ளோ ஒத்துழைப்பு. விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘கொடி’ படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் என்பது கூட பெரிய விஷயமில்லை. (அவர் பார்க்காத ரோல்களா?) ஆனால் இப்படத்தில் அவருக்கு டபுள் ரோல்!

“இந்த படத்திற்கு டப்பிங் பேசப் போயிருந்தேன். தனுஷின் நடிப்பை பார்த்து, நான் பேச வேண்டியதை கூட மறந்துட்டேன்” என்று சொல்லி வைத்த மாதிரி படத்தில் நடித்த அத்தனை பேரும் ஆச்சர்யப்பட்டு வருவது தனி. இப்படியொரு படத்தை தனுஷின் ரசிகர்களும் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில தியேட்டர்களில் இரண்டு தனுஷுக்குமே தனித்தனியாக கட் அவுட், தனித்தனியாக பால் குடம் என்று மன்றக்கண்மணிகளுக்கும் டபுள் செலவாம்.

இந்த சமயத்தில்தான் கொடிக்காக ஒரு பெரிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறார் தனுஷ். வரும் 25, மற்றும் 26 ம் தேதிகளில் சேலம், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொடி ரிலீஸ் ஆகியிருக்கும் தியேட்டர்களுக்கு ரவுண்ட் அடிக்கப் போகிறாராம். அவருடன் த்ரிஷாவும் செல்லவிருக்கிறார்.

ஏன்… இந்த தஞ்சாவூர், கடலூர், சீர்காழி, மயிலாடுதுறையெல்லாம் என்ன பாவம் பண்ணுச்சு தனுஷ் அண் த்ரிஷா?

To listen Audio Click below:-

Leave A Reply

Your email address will not be published.