இயக்குனர் பாண்டிராஜை டென்ஷன் ஆக்கிய விஜயகாந்த் வாரிசு?

1

பெரும் உழைப்பை கொட்டி ‘மெரீனா புரட்சி’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார் பசங்க பாண்டிராஜ். இப்படத்தை எம்.எஸ்.ராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்காக மெரீனாவில் கூடிய இளைஞர் கூட்டத்தையும், அதன் பின்னணியையும் அலசுகிற படம்தான் இது என்கிறார்கள்.

இன்றளவும் கூட, அந்த பெரிய கூட்டம் தானா சேர்ந்த கூட்டமா? அல்லது பின்னணியில் யாராவது பெரிய மனுஷர்களின் கை வேலை இருக்கிறதா? என்றெல்லாம் மண்டையை கசக்கிக் கொண்டிருக்கிறது ஊர். அதையெல்லாம் அலசுகிற படமாக மெரீனா புரட்சி இருக்கும் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்க… அதே கான்சப்டை மையமாக கொண்டுதான் விஜயகாந்தின் வாரிசு சண்முக பாண்டியன் நடிக்கும் மதுரவீரன் படமும் இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.

மெரீனா புரட்சி திரைக்கு வரும்போது, அப்படியே மதுர வீரன் மாதிரியே இருக்கு என்று யாராவது நக்கலடித்தால் அதற்கு பாண்டிராஜ் பொறுப்பல்ல. காலமும், அது தந்த தாமதமும்தான் எனக் கருத்தில் கொள்க!

வாழ்க மாடு… வளர்க கொம்பு!

1 Comment
  1. sandy says

    அதுக்கு விஜயகாந்த் பைய்யன் என்னய்யா பண்ணுவாரு.. டைரக்டர் கிட்டயிலே கேட்டுருக்கணும்…

Reply To sandy
Cancel Reply

Your email address will not be published.