எனக்காக தாங்கினார் ப்ரணிதா! புயலை கிளப்பும் இயக்குனர்!

0

நடிகை ப்ரணிதா சரியான அலட்டல் பேர்வழி என்பதுதான் இன்டஸ்ட்ரியின் டாக்! சும்மாயிருக்கிற நடிகைகளை உசுப்பேற்றி, “உனக்காக தனியா கேரவேன் கேளு. ஸ்டார் ஓட்டல் கேளு. அப்பதான் இங்க மதிப்பாங்க” என்றெல்லாம் சொல்வதாக குற்றச்சாட்டு உண்டு. ஆனால் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ பட இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி சொல்வதை கேட்டால், ப்ரணிதாவுக்கு மவுன்ட் ரோடில் சிலை வச்சாலும் தகும் என்பது போலவே இருந்தது.

இந்தப்படத்தின் ஷுட்டிங் ஒரு மலைப்பகுதியில் நடந்தது. பல நூறு மீட்டர்கள் மேலே சென்றுவிட்டோம். அங்கு கேரவேன் வராது. பெண்களுக்கு அடிப்படையான வசதிகளை கூட செஞ்சு கொடுக்க முடியாத இடம். ஆனால் மூன்று நாட்கள் அந்த இடத்தில் தங்கி அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார் ப்ரணிதா. அவரை என்னால மறக்கவே முடியாது என்றார் மகேந்திரன் ராஜாமணி.

காதல் தோல்வியடைந்த ஒருவனுக்கு நண்பர்களாக இருக்கும் மூன்று பேர், அவனால் படுகிற அவஸ்தைகள்தான் இந்தப்படத்தின் கதை. பெரிசா கதை இல்ல. ஆனால் தியேட்டருக்கு வந்தா இரண்டரை மணி நேரம் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு போகலாம் என்ற மகேந்திரன், சந்தானத்தின் சிஷ்யன். படத்தில் எல்லா தொலைக்காட்சிகளில் வரும் முக்கிய நிகழ்ச்சிகளையும் கிண்டலடித்திருக்கிறாராம். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும் விட்டு வைக்கவில்லை.

படம் திரைக்கு வரும்போது லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மறுபடியும் வாங்கி கட்டுவது நிச்சயம்.

இந்தப்படத்தின் ஹீரோ ஜெய், வழக்கம் போல பிரமோஷன்களுக்கு வராமல் அல்வா கொடுக்க ஆரம்பித்திருப்பதுதான் முக்கியமான அக்கப் போர்.

படம் பொங்கல் ரிலீஸ். அய்யோ… அதே நாளில் விஜய்யின் பைரவாவும் வருதே? அதுக்கென்ன… ஜெய்தான் அஜீத் ரசிகராச்சே. அவங்க பார்த்துப்பாங்க!

Leave A Reply

Your email address will not be published.