டைவேர்ஸ்

0

நல்லாயிருக்கணும்… நீடுழி வாழணும்… பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும் என்ற லட்சோப லட்சம் வாழ்த்து கோஷங்களுடன் மணவறை ஏறிய ஜோடி, எண்ணி இரண்டே வருடத்தில், கோர்ட் படியேறினால்…. என்னவென்று நினைப்பது? வாழு, வாழ விடு என்ற தத்துவத்தின் அர்த்தம் புரியாமல் தனித்தனியாக பிரிந்துவிடும் ஜோடிகளில், சினிமா ஜோடி என்றால் மட்டும் ஊர் உலகத்தின் கண்கள் முழுக்க அவர்கள் மீதுதான்.

குஷ்பு சுந்தர்சி மாதிரியோ, சினேகா பிரசன்னா போலவோ ஒரு சில தம்பதிகள்தான் சினிமா ஜோடிகளுக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள் போலிருக்கிறது. மற்ற ஜோடிகளில் பல, ‘அடங்குற ஆளா நீ, மடங்குற பாயா நீ’ என்று முறுக்கிக் கொண்டு திரிவதால், பேமிலி கோர்ட்டில் ஒரே களேபர கண்றாவிகள்.

அந்த களேபரத்திற்குள் தன்னையும் ஐக்கியமாக்கிக் கொள்ளப் போவதாக ஒரு ஜோடி பற்றி செய்திகள் கசிகின்றன. அதை நிஜமாக்குவது போலவே திருமணத்திற்கு பிறகும் வீடு தங்காமல் படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். தற்போது தனுஷின் வட சென்னை படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கும் அவருக்கு கணவர் ஏ.எல்.விஜய் தரப்பிலிருந்து வேணாம் வேணாம் என்கிற அட்வைசும் சேர்ந்து கொண்டதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.

இந்த ஒரு காரணம் மட்டும் தம்பதிகளுக்கு நடுவில் மனக்கசப்பை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளை இந்த ஜோடி மிதிக்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இதெல்லாம் பொய். எங்களுக்குள் எவ்வித பிரச்சனையுமில்லை என்று இருவருமே மறுத்தால், அதைவிட பெரிய சந்தோஷம் வேறொன்றும் இருக்க முடியாது.

ஆமென்!

Leave A Reply

Your email address will not be published.