பிரபுதேவா கோபம் நியாயம்தான்! அதற்காக இப்படியா செய்யணும்?
ஒரு டைரக்டரின் அந்தபுரத்தில் நுழைவதை விட மோசமான விஷயம், அவரது கதைக்குள் நுழைந்து கசாப்பு கத்தியை போடுவது! பிரபுதேவா இயக்குவதாக இருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தின் கதைக்குள் நுழைந்து அதை தனக்கு தோதாக மாற்றிக் கொள்வதற்கு இரு பெரும் ஹீரோக்கள் போட்டியிட்ட கதையைதான் நாம் எழுதியிருந்தோமே? அதன் பாலோ அப் இது.
கடும் கோபத்திற்கு ஆளான பிரபுதேவா, மும்பைக்கு போய் வெந்நீரில் குளித்து வேதனையை போக்கிக் கொண்டாலும், உள் மனசு மட்டும் “விடுவேனா விடுவேனா…” என்று இருந்தது போலும். மிக மிக மோசமான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இதை பழிவாங்கல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
தூத்துக்குடி, திருத்தம், மதுரை சம்பவம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த ஹரிக்குமார் என்ற டான்ஸ் மாஸ்டரை அழைத்தாராம். “என் தயாரிப்புல நீயே ஒரு படத்தை இயக்கி அதில் ஹீரோவா நடிக்கிற… இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்” என்றாராம்.
அட இதுல என்னய்யா பழிவாங்கல் கிடக்கு?
இந்தப்படத்திற்கு தலைப்பு என்ன தெரியுமா? கருப்பு ராஜா!
“அட… இப்படி சாச்சுப்புட்டாப்லயே?” என்று வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக இங்கு ஹரிக்குமாரின் படத்தையும் இடம் பெற செய்துள்ளோம்.