அட வடிவேலு… இதுக்கெல்லாமா சென்ட்டிமென்ட் பார்ப்பீங்க?

0

வால் நட்சத்திரம் முளைத்தால் ஒரு தலைவர் காலி. நாய் ஊளையிட்டால் தெருவில் யாருக்கோ சங்கு. ஆந்தையை பார்த்தால் அச்சச்சோ… காக்காய் கதறினால் அம்புட்டுதேன் என்றெல்லாம் நாட்டில் கொசு முட்டை போட்டால் கூட, பதற்றமடைகிற ஜாதி சினிமா ஜாதிதான். பெரியார் பற்றி பேசுவதை கூட ராகு காலத்தில் பேசிவிடக் கூடாது என்கிற அறிவுஜீவிகள் நிறைந்த இடம். இங்கு பல வருஷம் ஊறிக் கிடக்கும் வடிவேலுவுக்கும் அத்தகைய எண்ணம் முளைத்தால், அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான். ஆனால் இதுக்கெல்லாமா கவலைப்படுவது?

என்னதான்யா விஷயம்?

ஒன்றுமில்லை. வடிவேலு தாத்தாவாகிவிட்டார். சந்தோஷம்தானே? அங்குதான் பிரச்சனை. அவரது பிறந்த பேரப்பிள்ளைகள் ரெட்டை பிள்ளைகளாக பிறந்துவிட்டன. அட… அதுவும் சூப்பராச்சே? அங்குதான் ஃபீல் ஆகிவிட்டார் வைகைப்புயல்.

இரண்டும் ஆணாய் பிறந்தால் அதிர்ஷ்டம். பெண்ணாய் பிறந்தால் அதிர்ஷ்டம். ஆனால் ஆணும் பெண்ணுமாக சேர்ந்து பிறந்தால்? யாரோ ஒரு அடிமாட்டு ஜோசியன், ஆவாது சார் இது என்று கூறிவிட்டானாம். கெட்ட சகுனம் இது என்றும் போட்டுக் கொடுத்திருக்கிறான். இதன் காரணமாக சோகத்தில் விழுந்தவர்தான். டம்ளரை நகர்த்தி வைத்தால் கூட, தப்பாயிருச்சே… என்று பதறுகிறாராம் வடிவேலு.

ஏதோ ஒரு கெட்டது என்னை நோக்கி வருது என்று அவர் புலம்ப புலம்ப, சுற்றமும் நட்பும் சூடாகிக் கிடக்கிறது.

அரே பாபா… நமக்கு தெரிஞ்சே இப்படி இரட்டைக்குழந்தைகள் பிறந்த வீடுகள் பலவற்றில் சந்தோஷம் களை கட்டுது. கவலையை மூட்டை கட்டி டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு ஆக வேண்டியதை பாருங்களப்பு….!

Leave A Reply

Your email address will not be published.