பேட்டய கை மாத்தாதீங்க! சன்னிடம் போராடும் தயாரிப்பாளர்!

1

காக்காவா இருந்தாலும் அதன் முதுகில் கலர் பெயின்ட் அடிச்சு மயிலுன்னு நம்ப வைப்பதில் சமர்த்தர் தயாரிப்பாளர் தாணு. கபாலி என்கிற சுமார் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது அவரது விளம்பர அறிவே அன்றி வேறொன்றுமில்லை என்பதை இப்போதாவது தமிழ் சனம் ஒப்புக் கொள்ளும். அப்படிப்பட்டவர் கையில் இன்னொரு அண்ணாமலை, பாட்ஷா என்று நம்புகிற அளவுக்கு ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்தால்? பேனை பெருமாளாக்கி, பெருமாளையும் பேரிக்காய் ஆக்கிவிடுவாரே?

யெஸ்… ரஜினியின் பேட்ட படத்தின் இந்திய விநியோக பொறுப்பை தாணுவிடம் ஒப்படைக்க முன் வந்திருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். சர்கார் பட சமயத்தில் தேனான்டாள் நிறுவனத்தின் மீது எழுந்த அதிருப்தியின் காரணமாக இப்படியொரு முடிவை எடுத்ததாக கூறுகிறார்கள். ‘பேட்ட’ படத்தின் விநியோக உரிமையும் தேனான்டாளிடம்தான் இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்.

ஆனால், “கடந்த முறை தவறு நடந்துவிட்டது. இந்த முறை அது நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன். படத்தை கைமாற்ற வேண்டாம்” என்று போராடிக் கொண்டிருக்கிறாராம் தேனான்டாள் நிறுவன அதிபர் முரளி. எடுத்த முடிவில் உறுதியாக நிற்குமா? அல்லது இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று முடிவெடுக்குமா? சன் பிக்சர்சின் கையில் இருக்கிறது அது.

எதற்கும் விளம்பர நிறுவனங்கள் கலைப்புலி ஆபிசில் கர்சீப் போட்டு வைப்பது நல்லது!

1 Comment
  1. Kokki Kumar says

    Kalaipuli Thanu denied your above news as rumour.

Leave A Reply

Your email address will not be published.