அவங்களுக்கு சர்கார் இல்ல! திட்டவட்ட முடிவால் திடுக்!
தீபாவளிக்கு வரப்போகிறது விஜய்யின் ‘சர்கார்’. பலரும் படத்தை வாங்க கடுமையாக போட்டியிட்டார்கள். கடைசியில் ‘மெர்சல்’ படத்தில் நிறைய சம்பாதித்தும் அதை கைக்குக் கொண்டு வர முடியாதளவுக்கு கடன் பட்டிருந்த தேனான்டாள் பிலிம்ஸ் முரளிக்கே கொடுக்க சொல்லி உத்தரவிட்டாராம் கலாநிதிமாறன். 58 கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு தியேட்டர் உரிமை இவருக்கே வழங்கப்பட்டுள்ளது. பணத்தை முன் கூட்டியே தர வேண்டியதில்லை. விநியோகஸ்தர்களிடம் வசூலித்துக் கொடுத்தால் போதும் என்கிற சலுகையுடன்.
திமுக வுக்கும் அமரர் இராம.நாராயணன் குடும்பத்திற்கும் இருக்கிற உறவு சினிமாவிலும் தொடர வேண்டும். அதுவும் கஷ்டப்படுகிற நேரத்தில் கைகொடுக்க வேண்டும் என்கிற அக்கறைதான். இது குறித்து திரையுலகம் சந்தோஷப்படுகிற அதே நேரத்தில், முரளிக்கு ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கப்பட்டதாம் சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து.
தமிழ்சினிமா வியாபாரத்தில் தண்டல்காரர்கள் போல நடந்து கொள்ளும் இரண்டு பெரும் புள்ளிகளுக்கு மட்டும் நம்ம படம் போய் சேர்ந்துவிடக் கூடாது என்று கூறப்பட்டதாம். அதன்படி அந்த முதலைகளை தவிர்த்துவிட்டுதான் வியாபாரம் செய்திருக்கிறார் முரளி.
இப்படி நாலுபேர் கிளம்பினால், கோடம்பாக்கத்தில் குமைச்சல் குறையும்.