ரஜினியை திட்டுபவர்களுக்கு இங்கு இடம் இல்லை! கமல்ஹாசனின் டீசன்ட் பாலிடிக்ஸ்!

0

ஒரு ஒரு கட்சி மீட்டிங்! பேசியவர் மிகப்பெரிய பேச்சாளர். ஒரு எதிர்க்கட்சி தலைவரின் பெயரை சொல்லி, ‘அவரை திட்டாதீங்கப்பா. ஏன் சொல்றேன்னா அவரே அவங்க அப்பா செத்து ரெண்டு வருஷம் கழிச்சு பிறந்தவரு…’ என்று சொல்ல, கூட்டம் ‘கொலேர்’ என்று சிரித்தது. இப்படியாகதான் இருக்கிறது எல்லா கட்சி மீட்டிங்கும்!

அசிங்கத்தை வேரோடு பிடுங்க வேண்டும் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. அண்மையில் கமல்ஹாசனை சந்திக்கப் போன ஒரு சினிமா பிரமுகர், பேச்சு வாக்கில் ரஜினியை விமர்சிக்க…. கடும் கோபம் வந்ததாம் கமலுக்கு. ‘நீங்க என் இயக்கத்துல சேரணும்னு ஆசைப்பட்டு வந்திருக்கீங்க. ஓ.கே. அதுக்காக ரஜினியை விமர்சனம் பண்ணினால் நான் சந்தோஷப்படுவேன்னு நினைக்க வேண்டாம். உங்களுக்கு மட்டுமில்ல. இங்கு இணைய வரும் சாதாரண தொண்டனுக்கும் நான் சொல்லப் போற இன்சக்ஷன் இதுதான். யாரும் ரஜினியை தரக்குறைவாக பேசக்கூடாது’ என்று பொட்டில் அறைந்தார் போல சொன்னாராம் கமல்.

யாரையும் விமர்சிக்காத நாகரீக அரசியல்தான் ரஜினியின் நோக்கமும். இனி மேடைகளை கழிப்பிடங்களாக காண முடியாது என்கிற சந்தோஷத்தை தருகிறார்கள் இருவருமே.

தொடக்கம் போலவே இருக்கட்டும் நடப்பும்…

Leave A Reply

Your email address will not be published.