2 Comments
  1. கார்த்திக் says

    அரசியலுக்கு வரும் நடிகர்களை எம் ஜி ஆருடன் ஒப்பிடும் அளவிற்க்கு எம் ஜி ஆர் ஒன்றும் வீழ்த்தமுடியாத நபரல்ல ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர் போன்ற நடிகர்களாலும் காலப்போக்கில் காணாமல்(சினிமாவில்) போகும் பட்டியலில் உள்ளவர்களின் செல்வாக்குதான் எம் ஜி ஆருக்கு இருந்தது.ஆனால் பத்திரிக்கைகளை பணத்தாலும்,நிருபர்களை கவர்கொடுத்து கவர்செய்தும் வளர்ந்தவர், கலைஞரின் ஆளுமையால் அடங்கி,ஒடுங்கி கிடந்த உயர்சாதிய அச்சு ஊடகங்களால் முள்ளை முள்ளால் எடுக்க திராவிட சித்தாந்தங்களை நீர்க்கச்செய்ய திரவிட கட்டமைப்பில் வளர்ந்து வந்த எம்ஜி ஆரின் பதவி ஆசையை பயன்படுத்தி வளர்க்கப்பட்ட உறுவகப்படுத்தப்பட்ட பிம்பம் எம் ஜி ஆர்.நடிகர் விஜய் காற்றில் —- பறந்து எங்கோ ஒட்டிக்கொண்ட கதைதான் அக்———- கிரீடத்தை அடைய பல குறுக்கு வழிகளை கையாண்டுக்கொண்டிருக்கின்றது. எம் ஜி ஆர் என்பது மீடியக்களால் உறுவகப்படுத்தப்பட்ட பிம்பம் ஆனால் வெற்றிசின்னமல்ல அது ஒரு வகையில் ஊடக ஊழலால் விளைந்த வெற்றி.அதை நோக்கி பயணப்படுவது குருட்டுப்பூனை விட்டத்தை நோக்கி பயணிப்பது போலத்தான்.விட்டத்தை நோக்கி பாய்ந்த குருட்டுப்பூனை விஜயகாந்த்ன் நிலையை ஆய்விற்க்கு உட்படுத்தினால் இதை உணரலாம்.எம் ஜிஆர் என்னும் குருட்டுப்பூனை விட்டத்தை நோக்கி பாய்ந்தது அது முதல் பூனை அன்று விட்டம் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தது கிடைத்தது. எனவே இன்றைய குருட்டுப்பூனைகள் பாயும் நிலையிலேயே இல்லை.அடுத்து ரஜினி நாம் ஏற்கெனே ரஜினியை ஏகத்துக்கும் புகழ்ந்தார் போல் எழுதி தள்ளிவிட்டோம் ஆனாலும் சில செய்திகள் தேவை எம் ஜி ஆர்,கமல்,விஜயகாந்த்,விஜய்,அஜித் உள்ளிட்ட அனைவருமே ஒரு ப்ரீப்ளான் என்னும் முதலமைச்சர் கனவில் ஆரம்பம் முதலேவாழ்ந்தவர்கள் (இதற்க்கு பல சான்றுகள் உள்ளது எழுதினால் ஏடு கொள்ளாது) ஆனால் ஒரு லாம்பர்டா ஸ்கூட்டர்,ஒரு சொந்தவீடு +சிறந்த வில்லனாக வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்மன்றங்களை தவிர்த்து காந்தி,நேதாஜி,நேருவிற்க்கு மன்றம் அமையுங்கள் என்று ரசிகர்களை திருப்பி அனுப்பியவர் பிறகு மிகுந்த வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டவர்.பின்னாளில் காலம் அவரை 40 ஆண்டுகாலம் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவர்கள் லிஸ்ட்டில் நம்பர் ஒன் என்னும் ஸ்தானத்தில் வைத்துள்ளது.எம் ஜி ஆரை விஜயகாந்துடன் சினிமாவெற்றியில் ஒப்பிடுங்கள் அதுசரியாக இருக்கும் ரஜினியின் தொடர்சினிமாபெரு வெற்றி (மக்கள் ஆதரவு இருந்தால் தான் தொடர் பெருவெற்றி சாத்தியம்) எம் ஜி ஆரால் நெருங்கக்கூடமுடியாது.ஸோ எம் ஜி ஆருக்கே இந்நிலை என்றால் மற்ற நடிகர்கள் லிஸ்ட்டிலேயே இல்லை என்ன கமல் பற்றி பேச்சேகாணோம் என்கிறீர்களா கமல் சாதாரண நடிகர்தான் கிரேசிமோகன் குழுவில் இருக்கவேண்டிய ட்ராமா ஆர்டிஸ்ட் அவர் எல்லாம் உளவுத்துறை அளவிற்க்கு வொர்த் இல்லை

  2. Mohammed Aneez says

    சர்வே எனப்படும் சர்வைவலுக்காக நடத்தப்படும் ஒப்பந்தங்கள் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டு சம்பாதிக்க பயன்படும் கருவியாகவும்.அதுக்கு சரிப்பட்டுவராத ஆளாக இருந்தால் மட்டுமே நியாய தர்மம் பார்க்கும் அதுவும் ஒருதலைதான் என்னும் முடிவில் ஊடகங்கள் செயல்படுவது ஜனநாயகத்திற்க்கு அழகல்ல. (எக்ஸ்குளூசிவ் பேட்டி கொடுத்து டி ஆர் பி ஏற்றுதல் அல்லது பத்திரிக்கை மார்க்கெட்டை தூக்கி நிறுத்துதலுக்கு உடன் படவேண்டும் போல) ரஜினிகாந்த் என்னும் நடிகர் விமர்சனத்திற்க்கு உட்படவேண்டிய நபரே அவர் ஒன்றும் நேரடியாக தூதனாக அனுப்பி வைக்கப்பட்ட பிரதிநிதியல்ல.ஆனால் விமர்சிக்கும் நபர்களும்,நேரமும்,களங்களும்,ஒப்பீடுகளும் தவறு என்பதுதான் எமது கருத்து. பாசக ஆதரவு நிலை எடுத்தால் கிழித்து தொங்கவிட தயங்கமாட்டோம் நாம்.எம் ஜி ஆர்,ஜெயலலிதாவைவிட ரஜினி செல்வாக்கில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர்களைப்போல் சாட்டையை கையில் எடுக்கும் ரிங்-மாஸ்டராக ரஜினியால் இருக்கவேமுடியாது.விமர்சனத்திற்க்கு பதிலளிக்கும் அல்லது அதை எதிர்கொள்ளும் திறனும்,அறிவும் ரஜினிக்கு இருப்பது 1000%சந்தேகத்திற்குறியதே.தொடர் வெற்றி தோல்விகளை யெஸ் வெற்றியாக இருப்பினும்,தோல்வியாக இருப்பினும் அதை எதிர்கொள்ளும் அல்லது அதை தக்கவைக்கும் சாதுர்யம் ரஜினிக்கு இருக்குமா? என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக அல்ல பதிலே ரஜினிக்கே தற்போதுவரை நிச்சயமாக தெரியவே தெரியாது? ஏனெனில் ரஜினி யோசித்து முடிவெடுப்பதில்லை .சின்ன சின்ன விஷயத்திற்க்கே ஆண்டுகணக்கில் தியானம் செய்தே முடிவெடுப்பார் .அவர் மனநிலை சராசரி அறிவுள்ள மனிதனைவிட சற்று கீழான நிலையைஉடையதே .அவரையும் அவரின் செயல்களையும்,பேச்சுக்களையும் உளவியல் ரீதியாக அல்லது அரசியல் ஆய்வுக்குட்படுத்தினால் அவர் தனது ரசிகர்களை நினைத்துதான் பெரும் கவலைகொண்டுள்ளார் என்பது புலனாகின்றது.அவர்களை எப்படி ஒருங்கிணைப்பது தீவிர தன்மையுடைவர்கள் ஒரு பக்கம் ,அரசியலுக்கு கட்டாயம் வரவேண்டும் என்றுநினைப்பவர்கள் ஒரு புறம்.அழுத்தம் கொடுக்கும் ரசிகர்கள் ஒருபக்கம்,ஆன்மீக ரசிகர்கள் ஒருபுறம், அபிமானிகள்,ஏன் வரவில்லை என்று வினா எழுப்புபவகள்,இவ்வளவுநாள் இப்படியே இருந்துவிட்டார் நாங்களும் பழகிவிட்டோம் என்பவர்கள் அரசியல் நண்பர்களின் ஆலோசனை,அழுத்தம் ,நட்பு இவர் வந்தால் அரசியல் வாழ்வு தடைபடும் அல்லது நொறுங்கிவிடும் என்று நினைப்பவர்களின் நாகரீகமற்ற அரசியல் என்று பல நூறு கேள்விகணைகள் அல்ல ஏவுகணைகளே அவரின் மூளையைதாக்கிகொண்டிருக்கின்றது இதில் இருந்து மீண்டு வர பகுத்தறிவாளர்களாலும்,சிந்தனையாளர்களுமே திணறவேண்டியிருக்கும் ரஜினி தன் நிலையை இல்லாத கடவுளிடம் ஒப்படைத்தவர் அவர் தீர்க்கமாக அரசியலுக்கு வந்தாலும் முடிவெடுக்கமுடியாது தற்போதுள்ள நிலையைவிட படு மோசமாக விமர்சிக்கப்படுவார்
    இது மட்டுமல்ல பலவிடயங்களுள்ளது ரஜினியை விமர்சிக்க ஆனால் ரஜினி தமிழ் சினிமாவில் கடந்த 80 ஆண்டுகளில் யாராலும் குறிப்பாக எம்கேடி,எம்ஜிஆர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களைவிட தொடர் சரித்திர வெற்றியையும் ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிக்குமுன்பாகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருந்த ரஜினி கடந்த 35 வருடங்களாக கன்னடர்,மராத்தியர்,தமிழ்நாட்டிற்க்கு என்னசெய்தார்,அவருக்கு அரசியல் அரிச்சுவடிதெரியாது,காவிரி பிரச்சினைக்கும்,முல்லைப்பெரியாருக்கும் குரல்கொடுக்கவில்லை.ஈழப்பிரச்சினையில் மவுனம்,வெள்ளம் வந்தால் எதுவும் செய்யமாட்டர் என்று அவரின் செல்வாக்கை குறைக்க ஊடகங்களும் திடீர் அரசியல்வாதிகளும் கால் நூற்றாண்டுகளாக காட்டுத்தனமாக கத்திகொண்டு இருந்தாலும் ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கு குறையவில்லை என்பது கண்கூடாக தெரிகின்றது.இவரின் வயதையொட்டிய நடிகர்கள் மட்டுமல்ல இவருக்கு அடுத்தததலைமுறை நடிகர்கள் மட்டுமல்ல மூன்றாம் தலைமுறை நடிகர்களும் முட்டி மோதி வீழ்கின்ற நிலைதான் இன்றுவரை உலக அளவில் தொடர்ந்து 40 ஆண்டுகள் நம்பர் ஒன் ஸ்தானத்தை விட்டு இறங்காத நடிகர்மட்டுமல்ல வேறு எந்த நடிகரும் 10 ஆண்டுகள் கூட வீழ்த்தமுடியாத வெற்றியை கொடுத்ததில்லை உலக அளவில் ஆனாலும் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புமுதல்(இவங்காதான் சர்வெக்கே பிறந்த மனிதர்கள்போன்று பில்டப் வேற ) எந்த கருத்துகணிப்பிலயும் ரஜினியை விட 0.2% ,0.1% 4%,6% என்று விஜயகாந்த்,கமல்,மோகன்,ராமராஜன்,ராஜ்கிரண்,விஜய்,அஜித்,விக்ரம்,ஸ்ரீகாந்த்(இதுதான் கொடுமையிலும் கொடுமை ஸ்ரீகாந்த எல்லாம் லிஸ்ட்டுல) எல்லோரும் ரஜினியை சர்வேயில ஜெயிச்சுட்டு உடனே வீட்டுக்கு போயிடுவாங்க ஆனா ரஜினி மட்டும் கம்பேரிசனாகவே இருப்பார் இந்த சர்வே எடுக்கும் சர்வைவல் பார்ட்டிங்க இதை கவனிக்காம விட்டுடுறீங்களே ஏன்? டி ஆர் பியை ஏற்ற மாய்மாலம் செய்யுங்கள் பத்திரிக்கையை வளர்க்க படுபாதகம் செய்யுங்கள் ஆனால் கொஞ்சமாவது உண்மையை பேசுங்கள் ப்ளீஸ் ஊடக நம்பகத்தன்மையை கெடுக்காதீர்கள்……..

Leave A Reply

Your email address will not be published.