இன்று முதல் டப்பிங்! அஜீத் சுறுசுறு…

0

முழு படத்தையும் பல்கேரியாவில் முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டது விவேகம் டீம்! அங்கேயே ஒரு பூசணிக்காயை வாங்கி உடைத்து, (அட… பல்கேரியாவிலேயே அதெல்லாம் கிடைக்குதா?) சம்பிரதாயத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினாலும், மிச்சசொச்ச காட்சிகள் கொஞ்சம் இருக்கிறதாம். அவையெல்லாம் ப்ளூ மேட்டில் படம் பிடித்து சேர்த்துக் கொள்ளப்படும் என்கிறார்கள் உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில்.

இன்னொருபுறம் மளமளவென டப்பிங் பணிகளை துவங்குகிறார் டைரக்டர் சிவா. இன்று முதல் அஜீத் டயலாக் பேசுகிறார்.

கடந்த முறை வேதாளம் படத்திற்கு ஒரு டீசர் வெளியிட்டதோடு சரி. நேரடியாக படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள். இதனால் சற்றே கவலைக்குள்ளான அஜீத் ரசிகர்கள், ஒரு ட்ரெய்லர் வெளியிட்டிருக்கலாம் என்று புலம்பி வந்தது சுமார் ஒரு வருட தாமதத்தில் சிவாவின் காதுகளுக்கு விழுந்தது போலும். இன்னும் சில வாரங்களில் சுட சுட ஒரு ட்ரெய்லரை வெளியிடும் திட்டத்திலிருக்கிறார்கள்.

இந்த ட்ரெய்லரில் படத்தில் அஜீத் பேசும் பரபரப்பான வசனம் ஒன்றை சேர்க்கலாமா என்றும் திட்டம் இருக்கிறதாம். அஜீத்தின் ‘சரி’ என்கிற பதிலுக்காக காத்திருக்கிறது விவேகம் ஆபிசர்ஸ் டீம்!

சரின்னு… சொல்லுங்க அஜீத்!

Leave A Reply

Your email address will not be published.