ரஜினி தனிக்கட்சி தொடங்குவார்! பிரபல ஜோதிடர் கணிப்பு!

2

சோதிட உலகத்தில் ஷெல்வீயை தெரியாதவர்கள் இருக்க முடியாது. நடக்கறததான் சொல்லுவேன். சொல்றதுதான் நடக்கும் என்று சவால் விட்டு சொல்லும் ஷெல்வீ, ரஜினி விஷயத்தில் மண்ணை கவ்வுவாரா? வாக்கில் பலிப்பாரா? இதுதான் இப்போதைய பரபரப்பு.

ரஜினி நேற்று கிளப்பிய பூகம்பம், சோஷியல் மீடியாவில் பற்றி எரிகிறது. அரசியல் ஏரியாவில் இன்னும் சூடு. ரஜினி வந்தால் நம்ம கட்சி திவால் ஆகிடுமே என்று பல தலைவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பா.ம.க தலைமை சற்று மிரண்டுதான் போயிருக்கிறது. ஏற்கனவே விஜயகாந்த் கட்சியில் தன் சாதிக்கார இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக இணைந்ததை இந்த நிமிஷம் வரைக்கும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அதன் தலைமை, இப்போது ரஜினி என்கிற இன்னொருவர் வந்தால் எப்படி பொறுத்துக் கொள்ளும்? நேற்றிலிருந்தே ரஜினிக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அற்ற குளத்து அறுநீர் பறவை போலிருக்கும் விஜயகாந்த் கூடாரம், இன்னும் சுத்தமாக காலியாகும் என்ற பேச்சும் இருக்கிறது. திமுக வின் செயல் தலைவர் ஸ்டாலின் ‘அவர் வந்தால் வரவேற்போம்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் ஷெல்வீயும் தன் பங்குக்கு நெய் ஊற்றியிருக்கிறார் இந்த நெருப்பில். யெஸ்… “ரஜினி தேசிய கட்சியில் இணைவார் என்பதை விட, தனிக்கட்சி துவங்கதான் நிறைய வாய்ப்புள்ளது. 2018 ல் இருந்து அவருக்கு சனி திசை முடிந்து புதன் திசை துவங்குகிறது. இது மிக மிக விசேஷமான காலம். நிச்சயம் கட்சி ஆரம்பிப்பார். இந்த முறை நழுவிப் போக மாட்டார்” என்று கூறியிருக்கிறார்.

பளபளன்னு ஒரு கதிரவனுக்காக காத்திருக்கு ஊர். ரஜினிங்கிற பல்புல எவ்ளோ பவர் இருக்குன்னு பார்ப்போம்!

2 Comments
  1. Chellpa says

    ஆண்டவன் எப்ப சொல்லறது? ஆண்டவன் கிட்ட செத்தா கூட பேசமுடியாதுனு தெரியாத கூமுட்டைகள் இருக்கும் வரை ரஜினி மாறி frauds ஏமாத்திக்கொண்டு தான் இருப்பார்கள்.

    1. Arunan says

      தலைவா வாருங்கள். தமிழகம் மீண்டும் வளர்ச்சி பெற வாருங்கள். அரசியலுக்கு வாருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.