சுசித்ராவை பின்னாலிருந்து இயக்கும் ஹீரோ! ஆள் தெரிந்தும் அமைதி காக்கும் தனுஷ், விஷால்!

1

அடித்து புரட்டிப் போட்டுவிட்டார் பாடகி சுசித்ரா. இப்படியொரு பூகம்பம் வந்து தொலையும் என்று கனவில் கூட நினைத்திருக்கப் போவதில்லை சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள். “சுசித்ராவுக்கு ஸ்ட்ரெஸ்…. தயவு செஞ்சு புரிஞ்சுக்கங்க. யாரும் அந்த படங்களை ஷேர் பண்ண வேண்டாம்” என்று கூறுகிறார் அவரது கணவர் கார்த்திக். ஆனால் “சுசியின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படவில்லை” என்றும் கூறியிருக்கிறார் அவர்.

ஆனால் தன் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக கூறுகிறார் சுசித்ரா. யாரோ ஹேக்கர்கள் கையில் எப்படி இப்படி வகை தொகையான கிளிப்பிங்ஸ் சிக்கின? நாடே ரணகளப்பட்ட இத்தனை நாட்களும் அமைதியாக இருந்துவிட்டு இப்போது மட்டும் சுசித்ரா வாய் திறந்தது ஏன்? அவரது ட்விட்டர் கணக்கு திருடப்பட்டிருந்தால் சைபர் க்ரைமில் புகார் கொடுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை? இப்படி பல்வேறு கேள்விகள் உள்ளன இந்த விவகாரத்தில்.

இது குறித்து விசாரிக்க கிளம்பிய நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தமிழ்சினிமாவில் நடிப்பை தவிர, ஈவினிங் பார்ட்டிகளுக்கும் ஆட்டத்திற்கும் அலைந்து வரும் சுமார் 25 நடிகர் நடிகைகளுக்கென்று லீலை என்றொரு வாட்ஸ் ஆப் குரூப் துவங்கப்பட்டுள்ளதாம். இதன் அட்மின் யார் தெரியுமா? அந்த மூன்றெழுத்து நடிகர்தான்.

ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாளிலும் கூடும் இந்த கூட்டம், குடி கூத்து கும்மாளம் என்று இருந்திருக்கிறார்கள். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் மறுநாள் இந்த குரூப்பில் ஷேர் செய்யப்படுமாம். அப்படி பல்க் பல்க்காக சேமிக்கப்பட்ட படங்கள் அடங்கிய செல்போன்தான் இப்போது சுசித்ரா கையில் சிக்கியிருப்பதாகவும், அந்த செல்போன் மேற்படி மூன்றெழுத்துக்காரருடையது என்றும் கூறப்படுகிறது.

‘அவன் ஆட்டத்தையே முடிக்கிறேன்’ என்று களமிறங்கிய இன்னொரு மூன்றெழுத்துக்காரர்தான் சுசித்ராவை பின்னாலிருந்து இயக்குவதாகவும் காதை கடிக்கிறது கோடம்பாக்கம்.

இந்த பிரச்சனையை நடிகர் சங்கத் செயலாளர் என்ற முறையில் விஷால் கவனத்துக்கு கொண்டு போனார்களாம் சிலர். “இத்தனைக்கும் காரணம் யாருன்னு தெரியும். ஆனால் நானும் அவனும் பேசிக்க மாட்டோம். உன்னாலதான் இப்படி நடக்குதாமேன்னு கேட்டாலும், அவன்கிட்டயிருந்து சரியான பதில் வராது. அதனால் நான் ஒண்ணும் செய்யறதுக்கு இல்ல” என்று கூறிவிட்டாராம் அவர்.

ஒருவழியாக பகீரத முயற்சியால் சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுன்ட்டை முடக்கியிருக்கிறார்கள். ஆனாலும், வேறொரு ஐடி யின் மூலம் படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. அந்த செல்போனில் இருக்கும் அத்தனை படங்களும் வெளியாகிற வரைக்கும் அந்த மூன்றெழுத்து ஹீரோ ‘ஸ்டாப்’ பட்டனை அழுத்தப் போவதில்லை.

காறித்துப்புவதற்கு கோடம்பாக்கத்தில் இன்னும் பல சமாச்சாரங்கள் இருக்கிறது. அவை மெல்ல வெளியே வரும்!

1 Comment
  1. SUBRAMANIAM says

    ஆர்யா???

Leave A Reply

Your email address will not be published.