படமே பார்க்கல ஆனா வாங்குவேன்! விஜய் சேதுபதிக்காக ஒரு விநியோகஸ்தர்!

0

மக்களிடம் இருக்கும் செல்வத்தையெல்லாம் கொள்ளையடிப்பவர் எவரோ, அவரே ‘மக்கள் செல்வன்’ என்று வெட்டி வியாக்கியானம் பேசினால் கூட, விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட ‘மக்கள் செல்வன்’ பட்டம் செல்லும் போலதான் தோன்றுகிறது. ஏன்? 2017 ல் அதிக படத்தில் நடித்தவர். அதிக ஹிட் கொடுத்தவர் என்ற இரண்டு பதில்கள் போதுமே?

2018ல் விஜய் சேதுபதியின் முதல் படம் என்கிற பந்தாவோடு களம் இறங்குகிறது ‘ஒரு நல்ல பார்த்து சொல்றேன்’. கவுதம் கார்த்தியும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். ஆறுமுக குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் விநியோகஸ்தர் வி.சத்யமூர்த்தி.

இனி மினிமம் கியாரண்டி முறையே கிடையாது என்று விநியோகஸ்தர் சங்கமே அறிவித்த நிலையில், இந்தப் படத்தின் மீதிருக்கும் நம்பிக்கையில் மினிமம் கியாரண்டி முறையில் படத்தை வாங்கியிருக்கிறாராம் இவர். விஜய் சேதுபதி சார்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் படத்தை பார்க்காமலே வாங்கிவிட்டேன் என்கிறார் இவர்.

தமிழகம் முழுக்க 400 தியேட்டர்களில் களம் இறக்குகிறார்கள். பிப்ரவரி 2 ந் தேதி விநியோகஸ்தருக்கு மட்டுமல்ல, விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் நல்ல நாள்தான்!

Leave A Reply

Your email address will not be published.