கடைசியில இப்படியா ஆகணும் அஞ்சலி?

0

எந்த கிளையில் உட்கார்ந்தால் பழம் கிடைக்கும் என்பது கிளிக்குத் தெரியும். கிளிக்கு தெரிந்த உண்மை கிளி மாதிரி நடிகைகளுக்கு தெரியாமல் போகுமா? சமீபத்தில் அஞ்சலி எடுத்த ஒரு அதிரடி முடிவு… அவருக்கு முழு பழத்தை கொடுக்குமா? இல்லை… அணில் கடித்த பழத்தைதான் கொடுக்குமா? போக போகதான் தெரியும்.

வேறொன்றுமில்லை. தனது பழைய மேனேஜரை மாற்றிவிட்டு கீர்த்தி சுரேஷின் மேனஜரிடம் தனது கால்ஷீட் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டார். தற்போது டாப் கிளாஸ் நடிகையாக இருப்பவர் கீர்த்திசுரேஷ்தான். முன்பெல்லாம் கவர்ச்சியான கேரக்டர்களில் நடிக்க சம்மதித்து வந்த கீர்த்தி, ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்குப்பின் அடக்க ஒடுக்கமாக மட்டுமே நடிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். இதன் விளைவாக தன்னை தேடி வரும் பல படங்களை வேண்டாம் என்று மறுத்தும் வருகிறாராம்.

இப்படி அணில் கடித்த கால்ஷீட்டுகள் தன் மடியில் விழாதா என்பதால்தான் இப்படியொரு முடிவை அஞ்சலி எடுத்திருக்கிறார். கீர்த்தி சுரேஷிடம் இருந்து மறுக்கப்படும் படங்களை அப்படியே தள்ளிக் கொண்டு வந்து அஞ்சலியிடம் சேர்ப்பாரா மேனேஜர்?

ஆளுக்கொரு கணக்கு. அவ்வளவும் கள்ளக் கணக்கு!

Leave A Reply

Your email address will not be published.