லாரன்ஸ் பட பஞ்சாயத்தில் நீதிபதி மகன் தலையை உருட்டுகிறார்கள்! பைனான்சியர் போத்ரா படு எரிச்சல்!

0

வட்டிக்கு ஆசைப்பட்டு முட்டிவலியை வாங்கிக் கொண்டதுதான் மிச்சம் என்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறார் பிரபல பைனான்சியர் போத்ரா. லாரன்ஸ் நடிப்பில் வேந்தர் மூவிஸ் மதன் தயாரித்த ‘மொட்ட சிவா, கெட்ட சிவா’ படம் இன்னும் திரைக்கு வராமலிருக்க காரணமான ஒரே பாறாங்கல் இவர்தான் இப்போதைக்கு!

தனக்கு வரவேண்டிய 11 கோடி ரூபாய் பணத்தை முழுசா எண்ணி வச்சுட்டு இந்தப்படத்தை ரிலீஸ் பண்ணிகோங்க என்று கோர்ட் படியேறிவிட்டார் போத்ரா. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்பு இம்மாதம் 10 ந் தேதி. ஆனால் அதற்கு முன்பே நீதிபதியிடம் பேசிவிட்டோம். தடை உடைக்கப்பட்டுவிட்டது. விநியோகஸ்தர்கள் பணத்தோட வரலாம் என்று மொ.சி.கெ.சி தரப்பில் பேசிக் கொண்டிருப்பதாக பதறுகிறார் போத்ரா.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதியின் மகன் ஒரு பாடலாசிரியர். தற்போது ஏராளமான படங்களில் பாடல் எழுதி வரும் இவர் மூலமாகதான் இந்த விஷயத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக செய்தி பரப்பப்படுவதாக குற்றம் சுமத்துகிறார் போத்ரா.

“ஆனா நாம் நம்பல சார் அதை. நடிகை ரோஜா மீது நான் போட்ட வழக்குக்கு தீர்ப்பு வந்த போதும் சரி. இப்போ இந்த வழக்கில் வரப்போகும் தீர்ப்பும் சரி. நியாயமா இருக்கும்னு நம்புறேன். நீதிபதிகள் எல்லா காலத்திலும் நீதியை நிலை நாட்டுவாங்க” என்ற போத்ராவிடம், வளைத்து வளைத்து பல கேள்விகள் கேட்டாலும் இந்த ஒரே பதிலைதான் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

குன்ஹாவுக்காக காத்திருக்கிறார் போத்ரா. வரப்போவது குன்ஹாவா, குமாரசாமியா?

Leave A Reply

Your email address will not be published.